பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

類器蠶 பரகாலன் பைந்தமிழ்

வற்புறுத்தலாகாது என்று முறையறிந்து அடியேனால் இருக்க முடியவில்லை. எல்லாம் அறிந்த தேவரீருக்குத் தெரியாத செய்தி ஒன்று உண்டு. உம்மைப் பிரிந்து தகிக்க காட்டாத அடியேனை உம்முடைய அடியவர்கள் எல்லோரோடும் சமமாக நினைத்திருக்கின்றீர். ஒருக் கணமும் கலியன் உம்மைப் பிரிந்திருக்க முடியாது’ என்ற உண்மையை மாத்திரம் உம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை. நீர் இந்தளூரில் வந்து நிற்கும் செயலை ம்தத்திரே (6) என்கின்றார்.

நீர் எல்லாவித ஆற்றல்களை யுடையவராயிருந்தும் அடியேனிடத்து ஒரு கைங்கரியம் கொள்ள ஆற்றலற்ற வரானீர். இந்த நீசனால் என்ன கைங்கரியம் பண்ண முடியும்?' என்று நினைத்து அடியேனைத் தள்ளி வைக் இன்றிர், நிறையொன்றுமில்லாத நீசனேனையும் கைங்கரி வங்களுக்கு ஆளாம்படித் திருத்திப் பணி கொள்ள உமக்கு ஆற்றல் இல்லையே. அடியோடு எமக்கு ஆற்ற வில்லாதபடி மண்கட்டியாகப் படைத்து வைத்திருந் தாலும் ஒருவாறு ஆறியிருக்கலாம். சேதந கோடியில் படைத்து வைத்தீர்; சேஷத்துவமே சொரூபம் என்பதை யும் உணர்த்தி வைத்தீர், கைங்கரியம் புரியாவிடில் சேஷத் துவம் நிறைவு பெறாது என்றும் புரிய வைத்தீர், இவ் வளவு அறிவையும் பிறப்பித்து வைத்து அடியேனை ஒன்றுக்கும் உதவாதபடி தள்ளி வைத்தீர். கைங்கரியம் கொள்ளாவிடினும் திருவடியையாவது சேவை சாதிப்பிக் கலாம்; அந்தப் பேறும் பெற்றிலேன்; திருவடியையும் காட்டாதொழிந்தீர். பிறர்க்கென்றே ஏற்பட்டிருக்கும் திருவடிகளையும் உமக்காகக் கொண்டீர் போலும்; (7) என்கின்றார்.

'இந்தளூர் எம்பெருமானே! உமக்குப் பல நிறங்கள் உள்ளனவாகச் சாத்திரங்களால் அறியக் கிடக்கின்றது. கிருதயுகத்தில் உள்ளவர்கள் சத்துவகுணம் நிறைந்தவர்