பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f38 பரகாலன் பைந்தமிழ்

இவன்முத்துகளையும் நினைப்பூட்டும். வாழைமரங்கள் எம்மருங்கும் குலைகளுடன் நிறைந்து நின்று நிலச் செழிப்பினை நிலைநாட்டும்.

செம்பவளம் மரகதம் நல் முத்தம் காட்டத்

திகழ்பூகம் கதலிபல

வளம் மிக்கு எங்கும்" (7.8:8)

(பூகம்-கமுகு, கதலி-வாழை1 என்ற பாசுரப் பகுதியில் இதனை அறியலாம்.

வயல்களிலுள்ள குருகினங்கள் திரள் திரளாக மீன்களைப் பிடிக்க நீர்நிலைகளில் வந்து இழியும்; தம் விாய்க்குன் அடங்கக்கூடிய சிறு மீன்களைப் பிடித்துக் கதுப்பிலே அடக்கிக் கொண்டிருக்கும். இந்நிலையில் வேறொரு பெரிய மீன் வந்து தோன்ற, அதனைப் பிடிக்க அஞ்சிப்போய் பின்னையும் ஆசையினால் அதனை நேருங்கிக் கிட்டும் (7.5:2). குட்டிக்கு இரைதேடப் போகும் புள் தனியே செல்லாது தன் காதல் பெடையோடு சென்று சேற்றைக் கண்ட விடத்தும் பின் வாங்காது இரை தேடித் திரியும்; இங்கே ஒரு சங்கை பிறக்கலாம். 'மீன்கள் நிறைந்திருக்கும் இடத்தில் இரைதேடும்’ என்பது எப்படிப் பொருந்தும்? மீன் அருமைப்பட்டிருந் தாலன்றோ இரைதேட வேண்டும்' என்பதாக. புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடி' என்றுள்ள சொற்போக்கை நோக்கினால் ஐயம் எழக் காரணம் இல்லை. அங்குள்ள மீன்கள் நிலவளத்தாலே தூணும் துலாமும் போலே தடித் திருக்கும்; அவை பறவைக் குஞ்சுகளின் வாய்க்கு அடங்க மாட்டாலாகையால் பொருத்தமான சிறிய மீன்களைத் தேடிப்பிடிக்க வேண்டுமல்லவா? இந்த நுட்பமும் நம் கருத்தில் எழுகின்றது (7.8:4).