பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் #99

என்று ஆழ்வாரும் தம் பாசுரத்தில் குறிப்பிடுவர். இத் திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

தலச் சூழ்நிலை: இக்கோயில் எழிலார்ந்த சோலை கள் அமைந்த சூழ்நிலையில் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இருப்பது அல்லவா? திருமங்கையாழ் வாரும் இதனைப் பொழில் திருத்தேனார்த் தொகை" (2). தேனாரும் மலர்ப் பொழில்சூழ் திருத்தேவனார்த் தொகை (3), சுந்தரநல் பொழில் புடைசூழ் திருத்தே வனார்த் தொகை (4), சேடேறு பொழில்சூழ் திருத் தேவனார்த் தொகை (7) சீராரும் மலர்ப் பொழில்சூழ் திருத்தேவனார்த் தொகை (8) என்று குறிப்பிடுவர். திருக் கோயிலின் புறமெங்கும் பூக்கள் மலரப்பெற்ற சோலை கள் உள்ளன. அப் பூக்களின் தாது உதிரும்படியாக மண் .ணியாற்றின் அலைகள் வீசுகின்றன (1).இந்த மண்ணியாற் றங்கரையில் மிக்க பலசாலிகள் வசித்து வருகின்றனர் (5). இதனைத் திடகாத்திரமுள்ள உழவர்களைக் குறிப்பிடுவ தாகக் கொள்ளலாம். இவர்களைத் தவிர, திருநாங்கூரில் அக்காலத்தில் அந்தணர்களும் வாழ்ந்து வந்தனர் என் பதைப் பெருஞ் செல்வத்து எழில் மறையோர் நாங்கை தன்னுள்' என்று இருமுறை (7. 8) குறிப்பிடுவதையும் காணலாம்.

தத்துவக் கருத்துகள்: ஆழ்வார் பாசுரங்களில் உள்ள தத்துவக்கருத்துகளில் நம் மனம் அசை போடு கின்றது. ஒரு பாசுரத்தில்,

யாவருமாய் யாவையுமாய்

எழில்வேதப் பொருள்களுமாய் மூவருமாய் முதலாய மூர்த்தி (2)