பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 2 13

வழக்காக உள்ளது. திருமங்கையாழ்வார் மட்டிலுமே இத்தலத்து எம்பெருமானை ஒரு திருமொழியால் (4.7} மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தலத்துத் தீர்த்தம் 'திருவெள்ளக்குளம் என்பது; புஷ்கரிணியின் திருநாமமே திவ்விய தேசத்திற்கும் வழங்கலாயிற்று என்பது கருதத் தக்கது. முதற் பாசுரத்திலேயே திருவெள்ளக் குளத்து அண்ணா!' என்று எம்பெருமானை விளிப்பதால் எம்பெருமான் அண்ணன் ஆகின்றார்: அவன் எழுந்தருளி யிருக்கும் கோயில் அண்ணன் கோயில் ஆகின்றது, இந்தக் கோயிலின் திருநாமமே தலத்துப் பெயராகவும் ஆகிவிடு கின்றது.

தலத்துச் சூழ்நிலை : ஆழ்வார் பாசுரங்களினால் இத்தலத்துச் சூழ்நிலை அறியக் கிடக்கின்றது. இத்திருத் தலம் சிறிது சோலை சூழ்ந்தது.

சாலை (மண் சாலை) காணப்படும். (இப்போது அது தார்சாலையாகி இருக்கக் கூடும்). அங்கு "திருநாங்கூர், அண்ணன் கோயில் என்ற பெயர் பலகைகள் காணப்படும். இங்கிருந்து மாட்டு வண்டியுை ஆமர்த்திக்கொண்டு தான்திருநாங் கூர்த் திருப்பதிகளைச் சேவிக்க வேண்டும். நெடுஞ் சாலையிலிருந்து இரண்டு கி மீ. தொல்ைவி லுள்ளது திருவெள்ளக் குளம். இது குமுதவல்லி யின் வளர்ப்பிடமாகும். திருத்தேவனார்த் இதாகையிலிருந்து மேல் திசையில் முக்கால் இ. தி. தொலைவிலுள்ளது. சீகாழி இருப்பூர்தி நிலை யத்திலிருந்து தென்-கிழக்குத் திசையில் சுமார் பத்து கி. மீ. தொலைவிலுள்ளது. சிறிய ஊர்; எந்த வசதிகளும் இல்லாத ஊர். எம்பெருமான்; கண்ணன். நாராயணன், நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டல்ம். தாயார்: பூவார் திருமகள் நாச்சியார் பெரி. திரு 4.7 (பதிகம்) மேலும் விவரம் வேண்டுவோர் சோ. நா. தி. (2) கட்டுரை 8 காண்க.