பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露盤尊 பரகாலன் பைந்தமிழ்

உருவம் கொண்டு மாவலியின் யாகபூமிக்குச் சென்று பூமிதானம் பெற்ற பெருமான் (7). ஆழ்வாரின் வராக அவதார ஈடுபாடு மிகவும் அற்புதமானது.

இலம்பினிடைச் சிறுபரல்போல்

பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்ப

திருவா காரம் குலுங்கநில மடத்தைதனை

இடந்து புல்கிக் கோட்டிடைவைத தருளியம்ை:

கோமான் (8)

(சிலம்பின் இடை - தண்டைச் சிலம்பின் நடுவில்; பரல் - பருக்கைக் கல்; திருக்குளம்பு - அழகிய குளம்பு திரு - இலக்குமி; ஆகாரம் -

உடம்பு, நிலமடந்தை - பூமிப்பிராட்டி: இடந்து - கோட்டால் குத்தி எடுத்து; புல்கி - தழுவி1

என்று கூறுவர் ஆழ்வார். இதில் வராக அவதாரமாகிய பேருருவத்தைக் காட்டுகின்றார். இந்தக் கோல வராகத் தின் திருக்குளம்பில் மேருமலை தண்டைச் சிலம்பின் நடுவிலிட்ட பருக்கைக் கல் போன்று கணகனவென்று ஒலிக்குமாம்; திருமார்பில் பிராட்டியிருக்கும் இருப்பு குலுங்குமாம்; இந்த நிலையில் அண்டபித்தியில் சார்ந்து கிடந்த பூமிப் பிராட்டியைக் கோட்டால் குத்தி எடுத்துத் தழுவிக் கொண்டு கோரப் பல்லின்மீது நிலை நிறுத்திக் கொண்ட கோமான் (8). எல்லா இடங்களையும் கடந்து எட்டுத் திக்குகளிலும் எல்லாம் பூமியிலும் அண்டத்திலும் பரவிக் கீழ்வெள்ளம் கிளம்பிக் கடல் பெருகும்படியான பிரளயப் பெருவெள்ளத்தை முன்பொருகால்திருவயிற்றில் அடக்கிக் கொண்டவன் (9). இத்தகைய பெரும் புகழ்