பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர் திருத்தலப் பயணம் 241

வாய்ந்த எம்பெருமானே திருத்தெற்றியம்பலத்தில் அர்ச் சாவதாரமாக எழுந்தருளியிருப்பவன்.

குறிப்பு : நாங்கூர் வடமொழியில் காகபுளி என வழங்கும். ஆண்டு தோறும் தை அமாவாசையன்று நாங் கூரைச் சேர்ந்த பதினொரு திருக்கோயில் எம்பெருமான் களும் தங்கக் கருடவாகனங்கள்மீது காலையில் எழுந் தருளி மாலை வரையிலும் திருமணி மாடக்கோவிலில் (முதலாவது திருப்பதி) தங்குவார்கள். இதற்கென இத் திருக்கோயிலில் வரிசையாகத் தனித்தனி மண்டபங்கள் உள்ளன. எல்லோரும் இரவில் கருடசேவை தருகின்றனர். திருமங்கையாழ்வார் அன்னவாகனத்தின்மீது எழுத் தருளுவார். ஆண்டு முழுவதும் பதினொரு தங்கக் கருட வாகனங்களும் இத்திருக்கோயிலிலேயே பாதுகாப்பாக வைக்கப் பெறும். எம்பெருமான்கள் இந்த விழாக்கோலம் கொள்ளுவதற்குச் சென்னையிலுள்ள பல வைசியர்க்ள் (கோமுட்டிகள்) செலவை ஏற்கின்றனர். அதன்பிறகு "அம்போ’ என விட்டுவிடுவர். இந்த எம்பெருமான் களைக் கவனிப்பார் இலர் நித்திய பூசைகள்கூட பெரும் பாலான திருக்கோயில்களில் நடைபெறுவதில்லை.

ப. க.-16