பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 363

டையவன்; ஊற்றின்பத்தைத் தரும் தென்றல்போல் விரும்பத் தக்கவன்; நீர்போல் உயிர் தரிப்பிற்கு ஏது வானவன் (5). நினைத்ததை நினைத்தவாறு செய்து தலைக்கட்டிக் கொள்ளவல்ல சாமர்த்தியன், கேசியை அழித்து கேசவன் என்ற திருநாமம் பெற்றவன்; ஒளிமிக்க அணிகலன்களை வைத்தற்குரிய செப்பு போன்றவன்; திருமகள் கேள்வன், பவளத்தின் ஒளியை ஒத்திருப்பவன்; ஏழுலகங்கட்கும் நாயகன், கால தத்துவன்; திருவாழி ஏந்திய திருக்கையன்; அந்தணர்களின் கல்விக்குப் பொருளாக இருப்பவன் (6).

“எப்பொழுதும் முற்றிலும் மனநிறைவுடையவன்; திசை நான்முகனுக்குத் திருத்தமப்பன்; மூவரில் மூத்தவன்; பேரொளி வீசும் திருமேனியையுடையவன்; மண்ணுல கிற்கும் விண்ணுலகிற்கும் தலைவன்; சிவனைக் கூறுடம் பாகக் கொண்டவன்; அரி என்ற திருநாமமுடையவன்; எல்லாப் பொருள்களும் தன்னிடத்தில் பொருந்தும் படியான முழுமுதற் கருத்தன் (7), கன்றினால் கனி யுதிர்த்த காளை, பூதனையின் முலை தீட்டிய நஞ்சுடன் அவளுடைய உயிரையும் உண்ட சிறுவன்: இராவணனை மாய்த்த வீரன்; அன்பர்கட்கு ஆரா அமுதம் போன்றவன்; நச்சுவார் உச்சிமீது நிற்கும் நம்பி, கஞ்சனைக் காலனுல கிற்கு அனுப்பிய காளை (8). இசைபோல் இனியன்; இசையின் சாரமானவன்; பாலினுள் நெய்போல் மறைந் திருக்கும் பான்மையன்; நித்தியவிபூதிக்கு நாதன்; பேரொளி வீசும் திருமேனியன்; வேள்வி சொரூபி, விளக்

தாயாரால் நினைவூட்டப் பெற்றவராய், ஆழ் வார் எதிரில் வந்து காட்சியளிக்க, ஆலி நாடர், “நின்றவூர் நித்திலத்தொத்தினை. கன மங்கை புட் கண்டு கொண்டேனே' (பெரி திரு. 7. 10:5) என்று அப்பனையும் சேர்த்துத் துதித்தனர் என்பது ஈண்டு அறியத் தகும்.