பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意盛器 பரகாலன் பைந்தமிழ்

கும் சீலகுணத்தில் சிறந்தவன். எப்போதும் இத்திருக் குணத்தையே இயல்பாகவுடையவன்; பனிமா மதியம் தவழப் பெற்ற ஆகாயமாக இருப்பவன், பகலவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன், வடவேங்கடத்தின் கொடு முடியைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன்; நம்மால் விரும்பி வணங்கப்பெறுபவன் போகம் அநுபவிப்பதற் கான பகல் இராப் பொழுதுகட்கு நாயகன் (3). பேய்ச்சி மூலையிலுள்ள நஞ்சினை அமுது செய்த சிறுக்கன்; தென்னியார் வணங்கப்பெறும் தேவன்; திருக்கோவலூரில் இடைக்கழியில் முதலாழ்வார்களால் நெருக்குண்ட இளங் குமரன்; அந்தணர்களின் சிந்தையுள் புகுந்து அவர்களைத் தன் வழியே நியமித்துக் கொண்டிருப்பவன்; பிரகாசமே வடிவாகவுடையவன்; இத்தன்மைகளால் அடியேனை ஆட்படுத்திக்கொண்டவன்; எய்ப்பினில் வைப்பாக இருப் பவன்; பொன்னும் மணியும்போல் எல்லாராலும் விரும்பப் பெறுபவன் (4).

"நித்தியானந்தத்தால் காளைபோல் மிடுக்குடை யவன்; இமயத் திருப்பிரிதியில் தன் இருப்பைக்காட்டி அடியேனைத் தன் வசப்படுத்திக் கொண்டவன்; இம்மை மறுமைப் பயன்களை விரும்புவார்க்கு அளிக்கவல்லவன்; தான் விரும்பும் மனிதர்களைப் பரமபதத்தில் கொண்டு வைக்க வல்லவன்: கையிலே திருவாழியாழ்வான் இருப்ப தனால் எதிரிகட்கு எமன் போன்றவன்; திருநின்றவூரில் முத்துத் திரள்போல் வடிவு கொண்டு எழுந்தருளியிருப் பவன்; நீலமணி மயமான மலைபோன்று வடிவினையு

9. திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெரும்ானைப் பாடித் துதிக்கையில், திருதின்றவூர் பத்தரா விப் பெருமாள், முன்பு திருக்கடல் மல்ல்ையில் ஒரு பாடல் பெற்றது போதாதென்று மீட்டும் அவ்வூரிலுள்ள நாய்ச்சியாரான'என்னைப்பெற்ற