பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 2岱

இராமாவதாரத்தில் வசிட்ட சீடன் என்றும் கிருஷ்ணாவ தாரத்தில் சாத்தீபினி சீடன் என்றும் பேர்பெற்ற பெருமா னுக்கு அர்ச்சாவதாரத்தில் பரகால சீடன் என்று பெயர் பெறுதல் பெருமையாம் என்று வியாக்கியான சக்கர வர்த்தியின் கொள்கை. அடுத்து ஆழ்வார் திருநறையூர் என்ற திருத்தலத்துக்கு வரத் திருவுள்ளம் பற்றுகின்றார்.

23. திருநறையூர்' : நறையூர் நம்பியைத் திருமங்கையாழ்வார் ஒருவரே 189 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.*இப்பாசுரங்களில் வரும் கருத்துகளை நிரல் படுத்திக் கூறுவோம்.

10. திருகறையூர் : திருக்குடந்தையிலிருந்து திருவா ரூர் செல்லும் சாலையில் (சுமார் பத்து கி மீ. தொலைவில்) உள்ளது. நறையூர் நம்பியின் இருப்பிடம் சற்று உயரமான இடத்தில் அமைந் துள்ள இந்த இடம். "சுகந்தகிரி என்பது சுகந்தம் - நறுமண்ம் இதுவே தமிழில் கறை பூர் என்ற திருநாமம் பெற்றது. எம்பெருமான்: நறையூர் நம்பி; சீநிவாசன், நின்றதிருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார் : வஞ்சுளவல்லி நம்பிக்கை நாச்சியார். தனிச் சந்நிதி இல்லை. இத்திருத்தலம் கருட சேவைக் குப் பேர் போனது. இங்குள்ள கருடன் கல் கருடன்"; கருங்கல்லால் ஆனவன். பெரி. திரு. 2.4: 1; 4. 9:2; 6. 3: 3; 6.4 to 7. 3 (10 Loo கங்கள்) ; 7, 7; 4; 8, 2: 2; 10, 1: 5 திருநெடுந். 16, 17 சிறி. திருமடல் (30); பெரி. திருமடல் (38). மேலும் விளக்கம் வேண்டுவோர் ச்ோ.நா. தி. (1) கட்டுரை. 12 காண்க.

11. இந்த ஆழ்வார் 100க்கு மேற்பட்ட பாசுரங்க ளால் மங்களா சாசனம் செய்த மற்றோர் எம்பெருமான் திருக்கண்ணபுத்து செளரிராஜன் (102 பாசுரங்கள்).