பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சோழநாட்டுத் திருத்தலப் பயணம்

திருச்சேறையைச் சேவித்த திருமங்கையாழ்வார் (25) திருக்குடந்தைக்கு வருகின்றார். திருமங்கையாழ்வார் 15 தனி உதிரிப் பாசுரங்களாலும் (பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகத்தில் இரண்டு பாசுரங்களாலும், திருநெடுந்தாண்டகத்தில் மூன்று பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளார், இரு மடல்களிலும் இத்தலத்தைப்பற்றிய குறிப்பு வருகின்றது. திருக்கோயி லின் இறைவன் சந்நிதியும், முன் மண்டபங்களும் ஓர் இரதம்போல், அமைந்துள்ளன. மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் சக்கரங்கள், இரதத்தை இழுத்துச் செல்லும் குதிரைகள் இருக்கின்றன. இதனை நோக்கிய திருமங்கையாழ்வாரும் இத்திருக்கோயில் எம்பெரு மானைப் பற்றி மங்களாசாசனம் செய்துள்ள திருஎழுக் கூற்றிருக்கை என்ற பிரபந்தமும் இரதபந்தம்’ என்ற சித்திரக் கவியாக அமைந்துள்ளனர். இப்பிரபந்தம் சரணாகதித் தத்துவத்தை விளக்கும் பாசுரமாகும்.

1. க்கடக்கை : ம்பகோணம் நப் புர்தி ఫీపిii, *微獻 శిక్ట్రిత్ర தொலைவில் உள்ளது சார்ங்கபாணி திருக் கோயில். ஊருக்கு நடுவே நடுநாயகம்பேர்ல் இருப்பது, கும்பகோன்னத்திலுள்ள எல்லாத் திருக் கோயில்களையும்விடப் பெரியது. கோபுரமும் அப்படியே மிகப் பெரிதாக அமைந்துள்ளது. பதினொரு மாடங்களைக் கொண்டது. எம்பெரு மான் : சார்ங்கபாணி, ஆராவமுதன்; சயனத்