பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 88 ↑

கயமாகப் பேசுகின்றாள் என்பது பொருந்தும், அகப் பொருளில் புணர்ச்சியைச் சுனையாடல் என்றும், ரோட்டம் என்றும் பேசுகின்றோமல்லவா? எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையோ இங்குப் பொற்றாமரைக் கயத்தில் நீராடப் போவதாகச் சொல்லுகின்றாள். இங்கு இன்சுவை மிக்க பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கி யானம்: "மகள் அணியரங்கம் ஆடுதுமோ? என்று ஊரைச் சொன்னாள்; தான் பொற்றாமரைக் கயமென்று பெரிய பெருமானைச் சொல்லுகின்றாள்; தயரதன் பெற்ற மரகத மணித்தடம் (திருவாய். 10. 1:8) என்றும் வாசத்தடம் போலே வருவானே (டிெ. 8.5:1) என்றும் தடாகமாகச் சொல்லக் கடவதிறே" என்பதாம். மேலும் 'உம் பொன்’ என்கின்றது அல்லாத ஆழ்வார்கள்; மத் துறு கடைவெண்ணெய் களவினிலுரலிடை யாப்புண்டு, எத்திறம் உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவே' (டிெ-1.3:1) என்று அவதாரத்தை அநுசந்தித்தே அவர் கள் மோகித்தது! அர்ச்சாவதாரத்திலிறே இவள் மோகிப் பது' என்ற வியாக்கியானப்பகுதியும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. அடுத்து, ஆழ்வார் திருவிண்ணகர் செல்லச் சித்தமாகின்றார்.

26. திருவிண்ணகர்: தென்திருவேங்கடம் என்று வழங்கப்பெறும் இத்திருத்தலத்தைத் திருமங்கையாழ்வார் மூன்று திருமொழிகளாலும் (6.1;6.2:6.3) ஒரு தனிப் பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளார். பெரிய திருமடலில் ஆழ்வார், விண்ணகருள் பொன்மலை’ என்று எம்பெருமானைப் போற்றுகின்றார்.

2. திருவிண்னகர்: இதை ஒப்பிலியப்பன் சந்நிதி என்றும் வழங்குவர். கும்பகோணத்திலிருந்து 5 கி. மீ. தொல்ைவிலுள்ள்து. அடிக்கடி நகரப் பேருந்து வசதி உண்டு. தொலைவிலுள்ள சில ஊர்கட்குச் செல்லும் பேருந்துகளும் இச் சந்நிதி