பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பரகாலன் பைந்தமிழ்

முதல்திருமொழி: (6.1): சம்சாரத்தில் தமக்கு உண் டிான வெறுப்பையும் விண்ணகரப்பனிடம் தமக்கு உண் டான விருப்பையும் அவனது திருவுள்ளத்தில் படும்படி ஒருமுறைக்கு ஒன்பது முறை விண்ணப்பிக்கின்றார். "விண்னகர் மேவிய எம்பெருமானே! இவ்வுலகமெல்லாம் பிறர் வசப்பட்டிருக்கையில், நின்திருவடிகளைப் பரப்பி இலச்சின்ை பட நடந்து அவற்றை ஆட்படுத்திக் கொண் டது போலவே, அடியேனையும் ஆட்படுத்திக் கொள்ள வேண்டும் (1); பாற்கடல் கடையப்பட்டபொழுது அதில் தோன்றின நஞ்சினை அரனுக்கு உண்ணக் கொடுத்தாய்; புறவமுதாகிய உப்புச்சாற்றை உம்பர்கட்களித்தாய்; :சீதக்கடலுள் அமுது அன்ன பிராட்டியாராகிய உள்ள முதினை நீ ஏற்றுக்கொண்டாய் (2); கரிய திருமேனியை உடையாய், உன் திருமேனியில் சிவனுக்கு வலப்புறத்தில் இடம் அளித்தாய்; திரிபுரம் எரித்தபோது அவனுக்கு அழல்நிற அம்பானாய் (3); பிரளய காலத்தில் இருசுடர் களையும் பல்வேறு உலகங்களையும், அவற்றிலுள்ள பிராணிகளையும் நின் திருவயிற்றில் வைத்துப் பாலகனாய் ஒர் ஆலிலையில் திருக்கண் வளர்ந்தாய் (4); ஒலிகட் கெல்லாம் மூலகாரணமான அகரமாக இருக்கின்றாய்(5); அசித்தைத் திருமேனியாகக் கொண்டாய்; நான்மறை

வழியாகச் செல்லும். நாகேஸ்வரம் ப்யர் நிலையத்திலிருந்து 3கி. மீ. షిణః இங்கிருந்தும் ಡಿಕ್ಟ್ರಿಲ್ಕಿ செல்லலாம். எம்பெருமான்: ஒப்பிலியப்பன், திருவிண்ணகரப் பன், வேங்கடாசலபதி; கிழக்கு நோக்கிய திரு முகமண்டலம்; நின்ற திருக்கோலம். கிட்டத் தட்ட எட்டடி உயரம்; கம்பீரமான தோற்றம்; பால்வடியும் திருமுகம். தாயார்: பூமிப்பிராட்டி யார்; இருந்த திருக்கோலத்தில் வடக்கு நோக்கிய் திருமுகமண்டலம் கொண்டுள்ளார். இலக்குமி தேவிக்குத் தனிக்கோயில் இல்லை. ப்ெரி. திரு. 5.1:6,2:6.3 (பதிகங்கள்); 10.1;8.திருநெடுந்.29; சிறி. திருமடல் (39) பெரி. திருமடல் (53).