பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழநாட்டுத் திருத்தலப் பயணம் 297

சூழ்நிலை (சோஐை) : தோலைகளில், மணம் ழிக்கதாய், குளிர்ந்ததாய், இனிமையான தேனைப் பருகின வண்டுகள் குறிஞ்சிப் பண்ணைப் பாடுகின்றன (2). மரக் கொம்புகளிலுன்ன வண்டுகள் தமக்கு வாய்த்த இடின் களைத் துறந்து வயல்களில் ஏர் பிடித்து உழுகின்றவர் களின் தலைமுடியில் அணிந்திருக்கும் மலர்களில் உள்ள தேனை உணவாகக் கொண்டு இசைபாடுகின்றன (கி). சோலைகளில் வண்டலிட்ட நுண்ணிய மணல்களில் மாம்பழங்கள் விழுந்து வரிசையாகக் கிடக்கின்றன (6). அங்கு முல்லைக் கொடிகள் குருந்த மதத்தை முட்டாக் கிட்டுப் படர்ந்துள்ளன (7). படர்ந்த மட்டைகனை (இலைகளை) யுடைய தென்னை மரங்கள். குளங்களின் கரைகளிலேயே திற்கும்; அவற்றிலுண்டாகிய இளநீர்க் குலைகள் தாழ்ந்து நிற்கின்றபோது குளங்களை இனநீராலேயே நனைத்து மட்டைகளால் மறைத்து வைத்தாற் போலே இருக்கும் (8).

வயல் வளம் : பாசுரங்களால் வயல்வளத்தையும் அறிய முடிகின்றது. நாரைகள் நீர்நிலைகளில் சென்று அமர்ந்திருக்கும்; அவற்றின் கால்களில் கிறுமீண்கள் வந்து குத்தும்; குத்தினாலும் உறுமின் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு என்றாற்போல் அவற்றைக் கவனி யாது தாம் உட்கொள்ளும் பெருமீன்கள் வந்து கிட்டின வுடன் அவற்றின்மீது விழுந்து கொள்ளை கொள்ளும்(3). வண்டல் விட்டிருக்கும் நீர்நிலைகளில் கெண்டை மீன்கள் செருக்கினால் துள்ளும்போது அவற்றின் உடல் மின்னல் மின்னினாற்போலே இருக்கும். அதனைக் கண்ட மேகங் கள் தம்மிடத்து மின்னுகின்ற மின்னல் ஒளியே என்று கருதி மின்னலுக்கு அடுத்தபடி உண்டாக வேண்டிய இடி முழக்கத்தைச் செய்கின்றன (5)' வயல்களின் வாய்க்கால்

12. இடியும் மின்னலும் ஒரே காலத்தில்தான்

உண்டாகும், ஒளியின் வேகம் அதிகமாதலால்