பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பரகாலன் பைந்தமிழ்

யும் நெய்யையும் குடம் பாலையும் களவு வழியினால் அமுது செய்து திருவாழியைக் கையில் கொண்ட மாயன் (5); நப்பின்னைப் பிராட்டியை அடையும் பொருட்டு மன்னுசினத்த மழவிடைகளை வென்றொழித்தவன் (6): உருத்திரனைப் புறமுதுகிட்டோடச் செய்து வாணனின் ஆயிரத்தோள்களை அறுத்தெறிந்த பெருமான் (7); பாரதப் போரில் பாண்டவர்களின் பட்சபாதியாக நின்று பார்த்தனுக்குச் சாரதியாகத் தேரோட்டினவன்; உருத் திரன் கையில் ஒட்டிக் கொண்டு ஒன்றாலும் நிரம்பா திருந்த பிரம கபாலத்தைப் பிச்சையிட்டு நிரப்பியவன் (8): மண்ணுலகமும் விண்ணுலகமும் இருளால் சூழப் பெற்று மூடிக் கிடந்த நாளில் அன்ன வடிவமாய் அவ தரித்து அருமறைகளை வெளிப்படுத்தி அருளியவன் (9); இத்தனை அரிய செயல்களை ஆற்றின எம்பெரு மானே திருப்புள்ளம்பூதங்குடியில் கோயில் கொண்டிருப் பவன். அர்ச்சையில் விபவங்களும் (இராமன், கண்ணன், வாமன்) பரத்துவமும் அடங்கிருப்பதாகக் காட்டி எல்லா நிலை எம்பெருமான்களும் ஒருவனே என்பதை உணர்த்தும் வகையில் ஆழ்வார் பாசுரங்கள் அமைந் துன்னன.

39. திருக் கூடலூர் : புள்ளம் பூங்குடியிலிருந்து திருக்கூடலூருக்கு வருகின்றார் ஆழ்வார். இத்திவ்விய தேசம் ஆடுதுறைப் பெருமாள் கோயில்’ என்ற திருநாமத் தாலும் வழங்கி வருகின்றது. திருக்கோயிலைச் சுற்றி மருதநிலச் சூழ்நிலைதான்.

11. கூடலூர் : அய்யம் பேட்டை இருப்பூர் ©Ꮘ}☾ పిపీడః 6. இ. மீ. ಡ್ಗಿ! தஞ்சை பேருந்து வழியில் வருவதே சிறந்தது; சாலையின் மீதே உள்ளது. எம்பெரும்ான் : வையம் காத்த பெருமாள்; நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார் : பதுமாசன வல்லி: பெரி. திரு. 5. 2. (பதிகம்).