பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器岱翁 பரகாலன் பைந்தமிழ்

பெருநகர் (3) என்று போற்றுவதுடன் இத்தகைய நகரில் நலங்கொள் நான்மறை வல்லார்கள் (6) வாழ்வ. தையும் காட்டுவார்.

இறையதுபவம் எம்பெருமானை ஆழ்வார் அநுபவிக்கும் விதம் அற்புதமானது. அவர் கூறுவார் : பெரும்ான் திருவாழி, திருச்சங்குகளைக் கைகளில் ஏந்தியவன்; தாளமாமுகில் வண்ணன், தன்னுடைய சிறப் பியல்புகளையெல்லாம் தன் அடியார்கட்குக் காட்டிக் கொடுப்பவன். தன் திருவடிகளைப் பணிபவர்கட்கு அடிமைத் தன்மையை அருள்பவன்; திருவனந்தாழ் இனைப் ப்டுக்கையாகவுடையவன் (1). பிரளய காலத் தில் கடல் சூழ்ந்த உலகம் ஏழையும் உண்டு, பின்னர் உமிழ்ந்தவன் (2)'; நான் முகனைத் திருநாபிக் கமலத்தில் உண்டாக்கினவன்; தன் மார்பிலுள்ள வியர்வை நீரில் இவனின் சாபத்தைத் தொலைத்து, 'நீ முன்போல் உம்பருலகை ஆளக் கடவாய்' என்று விடை கொடுத்த வன் (3, 4). வக்கரன் வாய் முன்கண்ட மாயனே என்று வணங்கின தேவர்களின் வேண்டுகோட்கு இரங்கி நரசிம் மனாகி இரணியனின் உடலை நகங்களால் கிழித்து திரு வுள்ளம் மகிழ்ந்தவன் (5). விலங்குகளால் கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு வில்லால் இலங்கை மாநகர்க் இறைவனின் இருபது புயங்களையும் துணித்த வீரன் (6). அளவு மீறி வெண்ணெய் அமுது செய்ததால் யசோதைப் பிராட்டி மத்தினால் புடைப்பதாக வெருட்டிக் கண்ணி துண் சிறுத்தாம்பினால் கட்டுவதற்கு இசைந்திருந்த கண்ணன் (7), நப்பின்னைப் பிராட்டியின் திருமேனியை அணைவதற்கு அசுர இயல்புகொண்ட ஏழு காளைகளைக் கொன்றொழித்தவன் (8). இத்தகைய எம்பெருமான்

§. 5 మే படைத்தல், அழித்தல்கட்குக் குறி

டு.