பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 3.13

மணி போன்றவன்; மறைகளால் கூறப்பெற்றவன்; தனக்குச் சுவாமியானவன்; எப்பொழுதும் தனக்கு இனிமையாக இருப்பவன்; மழையினின்றும் ஆநிரை கனைக் காத்தவன் (1). திருப்பேர்நகரில் உறைபவன்; குறுங்குடியில் எழுந்தருளியிருப்பவன்; திருத்தண்காலில் தித்தியசந்நிதி பண்ணுபவன்; கரம்பனூரில் உத்தமனாக விளங்குபவன்: ஏழு கடல்கள், ஏழு குலபர்வதங்கள் ஏழு உலகங்கள் - இவற்றைப் பிரளயகாலத்தில் அழுது செய்தும் மனநிறைவு கொள்ளாதவன் (2), வராக கல்பத் தின் தொடக்கத்தில் கோல வராகமாய்த் திருவவதரித்துப் பூமியை அண் டபித்தியினின்றும் குத்தியெடுத்துக் கொணர்ந்தவன்; விரிந்த மண்ணுலகத்தையும் பரந்த விண்ணுலகத்தையும் தனக்கு உடலாக இருக்கப் பெற்றவன்; எப்போதும் தேனாய் அமுதமாய் இருப்பவன் முன்பொருகாலத்தில் திருமுள்ள முவந்து இடையனாகப் பிறந்தவன் (3).

விசாலமான கடலில் திருக்கன் வளர்த்தருள்பவன்; வலிய உடலையுடைய அசுரன் ஆவேசித்து வந்த சகடம் கட்டுக் குலைந்து சின்ன பின்னமாகும்படி திருவடி யாலுதைத்தவன்; இரணியனைக் கிழித்துப் போட்டவன்; இரண்டு திருவடிகளினால் உலகம் எல்லாவற்றையும் அளந்து கொண்டவன்(4). நீராய், தீயாய், நெடு திலக்னாய் இருப்பவன். இராவணனுடைய இலங்கை நகரைத் தீக் கிரையாச்சியவன்; வட முகாக்கினியாக இருப்பவன்; பரமபதத்திற்கு நிர்வாககன்; வைதிக அந்தணர்களின் மந்திர பூர்வமான அவிசை அக்கினிமுகத்தால் திருவமுது செய்பவன் (5). தம்முடை விருப்பு வெறுப்பை நீக்கி விட்டுத் தன்னைப்பற்றினவர்கட்கு உபாயமாக இருப் பவன் கம்சனைக்கொன்றொழித்தவன். உலகை உண்பதும் வெளிப் படுத்துவதுமான் திருவயிற்றையுடையவன்; வாணாசுரப்போரில் உருத்திரனைச் சலிக்கச் செய்தவன். (6)