உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தலப்பயணம் 3.19%

  • .

கையிலுள்ள கவனில் வைத்தெறியும் மணிகளின் ஒளி மலையெங்கும் மிகுதியாகக் காணப்பெறுகின்றது. (9.8:3}.

எம்பெருமான் : ஆழ்வார் அழகரை சோலைமலைக் களிறே" என்றும் தென் ஆனாய்’ (4. 9: 2; திருதெடுந் 10 என்று யானையாக உருவகித்து விளிக்கின்றார். ஒரு பதிகத்தில் (9. 8) பாசுரங்கள் நெஞ்சுக்குரைப்பனவாக அமைந்துள்ளது. எம்பெருமான் ஏழு தீவுகளும் ஏழுமாக் கடல்களுமாய்ப் பரந்து நிற்பவன் (1). பூமாலையையும் தீர்த்தத்தையும் ஏத்திக்கொண்டு நித்திய சூரிகளும் தேவர்களும் ஆச்ரயிக்கும் எம்பெருமான்; சேஷசயனத்தில் சோதி மிக்க கிரீடத்தையுடையவனாய் இருப்பவன் (2). நோய்கள் வளரப் பெற்ற உடல் நீங்குமாறு நின்று துதிப்பதற்காக இப் பரந்த பூமியைத் தந்து அருளியவன்; வாமன மூர்த்தியாய் இப்பரந்த பூமியையெல்லாம் அளந்து கொண்டவன் (3) பூதனையின் தஞ்சு தீட்டப் பெற்ற முலையைச் சுவைத்து உண்டவன்; இரக்கமற்ற அரக்கியான தாடகை முடியும்படி சங்கல்பித்த பெருமான் (4). வணக்கமற்ற இராவணன் போர்க்களத்தில் முடியும் படியாக அவனுடைய மணியணிந்த தலைகள் பத்தும் தரையில் உருளும் படியாகவும், அவனுடைய கவந்தம் தெய்வ ஆவேசம் கொண்டதுபோல் நின்று ஆடும்படி யாகவும் செய்தவன் (5). அரவணையில் துயின்றவன்; விளங்கனியின் மீது அசுராவேசம் கொண்ட (வத்சலா சுரன்) கன்றினை வீசி எறிந்தவன்; இராசக் கிரீடை நடத்தினவன் (6). தேனுகன் ஆவி போவதற்காக கழுதை உடலுடன் வந்த அவனைப் பனங்கனிமேல் எறிந்தவன் (7). திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மீது சயனித்திருந் தவன்; கிருவாய்ப்பாடியில் பிறந்து குதிரை வடிவாக வந்த கேசி என்ற அசுரன் வாயைக் கீண்டவன் (8). இத்தகைய எம்பெருமானை வணங்குவதற்குத் தன் நெஞ்சைத் தன்னுடன் வருமாறு அழைக்கின்றார்.