பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.336 பரகாலன் பைந்தமிழ்

2. திருவல்லவாழ்: திருப்புலியூரிலிருந்து திரு வல்லவாழ் என்ற திவ்விய தேசத்திற்கு வருகின்றார். இதனை மக்கள் திருவல்லா என்று வழங்குவர்.

தலத்தின் சூழ்நிலை: இருப்பூர்தி நிலையத்திலி ருந்து திருக்கோயிலுக்குச் செல்லும் நடைபாதையில் இரு மருங்கும் அடர்ந்து வளர்ந்துள்ள சோலைகளும் தோப்பு களும், வயல்களும் வாவிகளும், பூம்பொழில்களும் எவர் மனத்தையும் கவரும். இத்திருத்தலத்து எம்பெருமானைப் பற்றி திருமங்கையாழ்வார் தாமான தன்மையில் நின்று பேசுகின்றார். தம்முடைய நிலையை உள்நோக்கி ஆய்ந்து சம்சார பந்தம் (இவ்வுலகத் தொடர்பு) இன்னும் கழியவில்லை என்பதையும், இழவுக்கு அடியான உடல் உறவு இன்னமுத் தொடர்ச்சியறாது இருப்பதையும் கண்டு மனம் கவல்கின்றார் ஆழ்வார். திருவல்லவாழ் திருப் பதியை வாயாலே சொல்லுவதாக நெஞ்சு மருவப் பெற் நால் நன்று என்று அவருக்குத் தோன்றுகின்றது. தோன் றவே, அதனை நெஞ்சுக்கு உரைப்பதாக நடைபெறுகின் றது. இவரது திருமொழி (9.7).

தந்தைதாய் மக்களே சுற்றமென்று

உற்றவர் பற்றி நின்ற

பந்தமார் வாழ்க்கை நொந்துநீ பழியெனக் கருதி னாயேல்,

2. வல்லவாழ்: ஒர் இருப்பூர்தி நிலையம். நிலை ಡ್ಗಿ திருக்கோயிலுக்கு நடந்தே செல்ல வேண்டும். இறைவன் கோலப்பிரான்; நின்ற திருக்கோலம்; கிழ்க்கு நோக்கிய திருமுக ம்ண்ட் லம், தாயார்: செல்வத் திருக்கொழுந்து நாச்சி யார், வறு தசல்யதேவி. பெரி. திரு. 97 (பதிகம்); பெரிய திருமடல் (58) மேலும் விவரம் வேண்டு வோர் ம. கா. தி. (கட்டுரை 1-9) காண்க.