பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 பரகாலன் பைந்தமிழ்

தோழி, தாய், மகள் என்ற மூன்று நிலைகளும் எல்லாக் காலங்களிலும் இருந்தன என்று சொல்லப்பெற்றன. இதனை ஆசாரிய ஹிருதயம் அவஸ்தாதிரய விருத்தி (திரயம் - மூன்று; அவஸ்தை - நிலை) என்று பேசும்.

தோழிப் பாசுரங்கள் : இப்பாசுரங்களால் ஆன்மாக்கள் யாவும் பிற தெய்வங்கட்கு அடிமைப் பட்டவை அன்று எனவும், அவை தமக்குத் தாமே அடிமை அன்று எனவும் ஆகிய அநந்யார்ஹ சேஷத் துவத்தைத் தெரிவிக்கின்றன. திருமங்கையாழ்வார் பாசுரத்தில் தோழிப் பாசுரங்கள் பகுப்பு இல்லை.

தாய்ப் பாசுரங்கள் : இவை ஈசுவர பாரதந்திரியத் தையும் அவனே உபாயம் என்பதையும் தெரிவிக்கின்றன. பெரிய திருமொழியில் உள்ள பன்னிரெண்டு பதிகங்களும் ஈசுவர பாரதந்திரியத்தையும் அவனே உபாயமாகின்றான் என்ற கருத்தையும் தெரிவிக்கின்றன.

மகள் பாசுரங்கள் : பிரணவத்தாலும் நமஸ்ஸாலும் எல்லோருக்கும் சேஷியாய் (தலைவனாய்) சரண்யனாய், அறுதியிடப் பெற்றவன் எம்பெருமான். எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவனும் இவனே. பிரணவத்தாலும் நமஸ்ஸாலும் இவை உணரப் பெற்ற பின்பு, நாராய ணாய என்ற சொல்லினால் கூறப்பெற்றுள்ள சொரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றின் சேர்க்கையாலுள்ள

ASA SSASAS SSAS

5. ஆசா. ஹிரு. 138.

6. சொரூபம் - ஈசுவரனின் தியானத்திற்குரிய சொரூபம்: ரூபம் - பகவானுடைய திவ்வியமங்கள விக்கிரகஹம்; குணம் - ஆன்ம குணம், விக்கிரக குணம்; ஆன்ம குணங்கள் - ஞானம், சக்தி முதலியன; விக்கிரக குணம் - அழகு, மென்மை முதலியன; விபூதி - நியமிக்கப்படும் பொருள்.