பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 357

பெருமையை நினைந்து மகிழ்பவள் மகள். எம்பெருமான் சாத்தியோபாவமாக இருந்தால் தாம் செய்யும் சாதனங்கள் முடிவுற்ற பிறகே சாத்தியமாகின்ற பேறு கிடைக்கக் கூடும் என்று பொறுத்திருக்கலாம். ஆனால் அவன் சித்தோபாயமாக இருப்பவன். அதனால் அவனைத் தாமதித்து அநுபவிக்கக் காரணம் இல்லை. அவனே உபாயம் என்ற கோட்பாட்டையும் மீறித தான் நினைத்த பேற்றினை உடனே பெற வேண்டும் என்ற பதற்றத்தை உடையவளாக இருக்கின்றவன் இவள். இந்த மனநிலை தான் மகள்' (தலைவி என்று குறிப்பிடப் பெறுகின்றது. திருமங்கையாழ்வாரின் மகன் பாசுரங்களாக உள்ள பதினைந்து பதிகங்களும் இந்த நிலையையேகுறிக்கின்றன. இந்த மூன்று திலைகளும் தோன்றுவதை ஆசாரிய ஹிருதயம் விளக்குகின்றது."

வேதாந்தங்களில் குறிப்பிடப் பெறும் பக்தி இங்கனம் ஆழ்வார்களிடம் காதல் முறையில் பரிணமித்து நிற்றலை அறியமுடிகின்றது. இவர்கள் எம்பெருமான்மீதுகொள்ளும் காமம் பகவத் விஷய காமம்' என்று வழங்கப் பெறும். இங்ங்ணம் இவர்கள் மாதவன்மீது கொள்ளும் காமம் மங்கையர் மீது கொள்ளும் காமத்தினின்றும் மாறுபட்டது. ஆயினும், சிற்றின்ப அநுபவமாகிய காதலுக்குக் கூறப் பெறும் அகப்பொருள் துறைகள் யாவும் பகவத் விஷய காமத்துக்கும் கூறப்பெறும். சிற்றின்ப அநுபவத்திற்குக் கொங்கை முதலியன சாதனமாயிருப்பது போல, பகவத்

7. சாத்தியோபாயம் - மக்களால் சாதித்துக் கொள்ளு

கின உபாயம். எ-டு பக்தி, பிரபத்தி

8. சித்தோபாயம் - முன்னமே இருக்கும் உபாயம்;

அஃதாவது இறைவனாகிய உபாயம்.

9. ஆசா. ஹிரு. 134 (புருடோத்தம நாயுடு பதிப்பு)