பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 3密芷

(ஊழி - கற்பம், ஒண்சுடர் - சூரியன்: துயின்றது. இறந்தது; ஆழி. கடல்: புலம்பும் - ஒலிக்கின்றது; துனைமுலை - இரண்டு முலைகள்: அரக்கும் . பிடுங்குதல்; என் பொன் - என் மகள்)

காதல் மிகுதலால் பரகால நாயகின் வாய்வெருவுதல் களைத் திருத்தாயார் பாசுரமிட்டுப் பேசுகின்றாள்.

ஊழியிற் பெரிதால் நாழிகை என்னும் : தலை வனைப்பிரித்த தலைவி ஆற்றாதாளாய் அவன் இல்லாமல் இரவு கழிக்க முடியாத நிலையைச் சொல்லும்போது, ‘ஒரு நாழிகைப் பொழுது எத்தனையோ டிகமாய்ப் பெருகிச் செல்லுகின்றதே! என்று இரவு நீட்டித்தலைச் சொல்லுவது வழக்கம். அப்படியே பரகால நாயகியும் சொல்லுகின்றாள். தலைவன் தலைவி கூடியிருக்கும் போது நீண்டகாலங்களும் ஒரு தொடிப் பொழுதாய்க் கழித்துவிடும் என்பதும், பிரிந்த காலத்தில் ஒரு கணப் பொழுதும் பல்லுழிகளாய்க் கழியும் என்பதும் அதுபவப் புகழ் வாய்ந்தது.

பலபல ஊழிகள் ஆயிடும்;

அன்றிஓர் நாழிகையைப் பலபல கூறிட்ட கூறாயிடும்;

பலபல நாள் அன்டர் கூடிலும் நீங்கிலும் யாம்மெலிதும்

-திருவிருத். 16 என்ற நம்மாழ்வார் வாக்கும்,

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா (குறள் 1169)