பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. தாய்ப் பாசுரங்கள்

பெரிய திருமொழியில் தாய்ப்பாவனையில் நடை பெறுவன பன்னிரண்டு பதிகங்கள். இவை ஈசுவர பார தந்திரியத்தையும், அவனே உபாயமாகின்றான் என்ற கருத்தையும் தெரிவிப்பதாகச் சுட்டி உரைத்தோம் (ஆ. ஹி. 134). பாசுரங்களைக் கொண்டு இவற்றை விளக்குவோம்.

1. திவளும் வெண்மதிபோல் (2. 7) : இத்திரு மொழி திருவிடஎங்தை எம்பெருமான்பற்றியது. தாய் வாக்காக நடைபெறுவது. இதில் ஒரு பாசுரம்.

ஊழியிற் பெரிதால் நாழிகை என்னும்;

ஒண்சுடர் துயின்றதால் என்னும்; ஆழியும் புலம்பும்; அன்றிலும் உறங்கா;

தென்றலும் தீயினிற் கொடிதாம்; தோழி!ஓ! என்னும்; துணைமுலை அரக்கும்;

சொல்லுமின் என்செய் கேன்? என்னும்; ஏழைஎன் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்?

இடவெந்தை எந்தை பிரானே! (4) 1. பெரி. திரு. 2.7; 3.7; 4.8; 5.5; 8.1; 8.2; 9.9: 10.4 10.5; 10.7; 10.9; திருநெடுந் (11-20) தாய்ப்பாசுரங்களின் தத்துவம் முன்னர் விளக்கப் பெற்றது. இயல்-16 க்ாண்க.