பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 369

என்பது முதல் பாசுரம், பரகால நாயகியைப் பெற்றெ டுத்த திருத் தாயார் திருவரங்கநாதன் திறத்தில் தன் மகள் காதல் கொண்டு பித்தேறிக் கிடக்கும் நிலையை ஒல் வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு வகையாக ஒன்பது பாசு ரங்களில் பேசி என் மகளை இப்பாடுபடுத்தினானே எம் பெருமான்’ என்று சொல்வித் தீர்க்கின்றான்.

வேங்கடகே! வேங்கடமே! என்கின்றானால்: திருவரங்கப் பதிகத்தில் வேங்கடம் குறிப்பிடுவது எற்றுக்கு? என்ற ஐயம் எழுகின்றது. இதற்கு பிரதிவாதி பயங்கரம் அண்ணசாமி தரும் விளக்கம்; விண்ணுலக வைகுந்த மாநகரே மண்ணுலகத் திருவரங்கமாகவும், விரஜை நதியே காவிரி நதியாகவும் பரவாசுதேவனே அரங்கநாத னாகவும் அவதரித்ததாக மாமுனிவர்களும் நம்முன்னோ ரும் கூறுவர். பரமபத நாதன் பயண மேற்கொண்டு புறப்பட்டு வருகையில் திருவேங்கடமலையில் சிறிது இளைப்பாற நின்றான். பின்னர்த் திருவரங்கத்தில் வந்து சாய்ந்தான். திருப்பாணாழ்வாரும் விண்ணவர் கோன் விரைவான் பொழில் வேங்கடவன்’ என்றார். இவரே மூன் றாம் பாசுரத்திலும் மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள் சந்திசெய்ய கின்றான் அரங்கத் தரவின் அனை யான்' என்றார். இதனால் திருவேங்கடமலையில் நின்றும் திருவரங்கத்தில் வந்து பொருந்தினமையும் சொல்லப் பட்டது. மேலும் திருவேங்கமுடையான் நின்ற திருக் கோலத்தில் சேவை சாதிக்கின்றமையால் வெளிப் பயனத் திற்காக நிற்கின்றார் போலும் என்று தோற்றக் கூடிய தாதலாலும், திருவரங்கத்தில் கிடந்த திருக்கோலமாகச் சேவை சாதிக்கின்றமையால் இனி எங்கும் போக

3. அமலனாதி-1 4. டிெ-3

34 سبسrrتك ، فسي