பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375 பரகாலன் பைந்தமிழ்

எளியார் கையிலே பிடிபடுவதும் உரலோடு தாம்பினால் பிணிப்புண்டு ஏங்கிக் கிடப்பதும் இவையன்றோ அவனு டைய திவ்விய கீர்த்திகள்!' என்று ஏச்சாகச் சிலர் சொல்லுவார்கள்; அவனிடம் இவளுக்கு வெறுப்பை உண்டாக்குவதற்காகச் சொல்லும் இச் சொற்கள் உவப்புக்கு எருவிட்டாற் போலாகின்றன: * பெற வேண்டியதைப் பெற்றவனானவன் (அவாப்தசமஸ்த காமனானவன்) குறைவாளரைப்போலே வெண்ணெய் உண்ண ஆசைப் படுவதே! அந்த வெண்ணெயும் மனை யிலே ஏராளமாக இருக்கவும், அது பிறருடையதாக இருக்க வேண்டும் என்றும், அதுவும் களவு வழியிலே சம்பாதித்து உண்ண வேண்டும் என்றும் விரும்பிக் களவு செய்வதே! அதைச் செய்தாலும் சாமர்த்தியமாகச் செய்து செரிப்பித்துக் கொள்ள வல்ல ஆற்றலிருந்தும், ஆற்றலற்றவனைப் போல் வாயது கையதாக அகப்பட்டுக் கொண்டு கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்டு. அழுது ஏங்கிக் கிடப்பதே ஆகா! இத்தனை செளலப்பிய செளசீல் குணம் வாய்ந்த ஒரு பெருமானையன்றோ நாம் ஆசைப்பட்டோம்! நம்முடைய பாக்கியமே பாக்கி யம்! அவனுடைய சேர்க்கை (சம்ஸ்லேஷம்) நமக்குக் கிடையாதொழியினும் ஒழிக, இப்படிப்பட்ட பெருமா னிடத்தில் நாம் ஆசைப்படப் பெற்றதே நமக்கு எல்லாப் பேறும் கிடைத்த படியாகும் அன்றோ? என்று சொல்லி அவனுடைய திருமேனியுடன் அணையப் பெற்றால் பிறக்கக்கூடிய மகிழ்ச்சி நிலைமையைப் பெறுகின்றாள் இப் பெண்பிள்ளை' என்கின்றாள். இவ்விடத்தில் "அவாப்த சமஸ்தகாமனானவன் ஒருத்தியுடைமையை ஆசைப்படுவதாம்; ஸர்வ சக்தியானவன் களவிலே இழிவ. தாம்; அது தன்னிலும் அகப்பட்டுக் கட்டுண்ணும்படி எளியனாவதாம்; இனி நமக்கொரு குறையுண்டோ? என்கின்றாள்' என்ற இன்சுவை மிக்க வியாக்கியான பூர் சூக்தி கண்டு மகிழத்தக்கது.