பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 377

வண்ணமும் பொன்னிறமாவ தொழிவதே : பெண்டிர்க் குப் பிரிவாற்றாமையினால் தோன்றும் பசலை திறம் பொன்னிறம் எனப்படும்; அது கவலைக்கு அறிகுறி. அந்த நிறம் ஒழிந்த தென்றால் மகிழ்ச்சி உண்டாயிற்று என்ற படியாம். அவனுடைய திருக்குணங்களைப் பிறர் ஏச்சாகச்சொன்னாலும் கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான், காடுவாழ் சாதியும் ஆகப் பெற்றான், பற்றியுரவிடை ஆப்புமுண்டான் பாவிகாள், உங்களுக் கேச்சுக் ஜொலோ? (நாச், திரு. 12: 8) என்னும் மெய்யன் புடையவளாதலால் அந்தத் திவ்விய கீர்த்தி செவிப்பட்ட மாத்திரத்திலும் அவனோடு தனக்குக் கலவி நேர்த்த தாகவே கொண்டு திறவேறுபாடு மாறப்பெற்றாள் என்க.

7. மூவரில் முதல்வன் (9, 9) : மாலிருஞ்சோலை வணங்குதும் வாமட நெஞ்சே!” என்று, ஒரு தடவை சொன்னது போல் ஒன்பது தடவை சொல்லிக் கொண்டு திருமாலிருஞ் சோலையை அதுபவித்த ஆழ்வார் அல் விடத்து அழகருடைய பேரழகிலே நெஞ்சைப் பறி கொடுத்து தாமானதன்மையை இழந்து ஒரு பிராட்டியின் நினைய அடைகின்றார். தம் மகள் சுந்தரத் தோளுடை யானை அணையவேண்டும் என்ற ஆற்றாமையால் வருந்துவதைத் திருத்தாயார் எடுத்துரைப்பதாய் நடை பெறுகின்றது. இத்திருமொழி! 'அவனை அணைந்து ஆனந்திக்கும் படியான பாக்கியத்தைப் பெறுவளோ? அன்றி இங்கனம் நோவு பட்டுக்கொண்டே இருக்கக் கடவளோ என்று சங்கித்து இறுதிப்பாட்டில் அணையப்

பெறுவாள்' என்று அறுதியிட்டுத் தரிக்கிற படியை வெளியிடுகின்றாள்' என்பதாம்.

புள்ளினை வாய்பிளந்து

பொருமாகரி கொம்பொசித்து

கள்ளச் சகடுரைத்த

கருமாணிக்க மாமலையை