பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.8 பரகாலன் பைந்தமிழ்

தெள்ளருவி கொழிக்கும்

திருமாலிருஞ் சோலைநின்ற

வள்ளலை வாணுதலாள்

வணங்கித்தொழ வல்லள்கொலோ? (7)

என்பது இத்திருமொழியின் ஏழாம் பாசுரம், 'கண்ண பிரானாகத் திருவவதரித்து பாகாசுரனுடையவாயைக் கீண்டொழித்தும் கம்சனது மாளிகை வாசலிலே குவலயா பீட யானையைக் கொம்பொசித்துத் தொலைத்தும் மிகச் சிறுவயதில் சகடாசுரனைத் திருவடியால் வதைத் தொழித்தும் செய்தருளின பகைவர்களை அழிக்கும் பெருமை இன்றும் விளங்கும் படியாகத் திருமாலிருஞ் சோலையில் நித்திய சந்நிதி பண்ணியிருக்கின்ற பரம உதாரரான பெருமானை என்மகள் வணங்கித் தொழும் படியான பாக்கியம் பெறுவளோ?' என்கின்றாள் திருத் தாயார்.

8. புள்ளுருவாகி ஆள்ளிருள் வந்த (10, 9): இத் திருமொழி திருத்தாயார் பாசுரமாகச் சொல்லுகின்றது. சர்வேசுவரனான நாயகனோடு கலந்து பிரிந்து பிரிவாற் றாதளான பரகால நாயகியின் கடலின் மிக்க காதலையும் அக்காதலுக்குத் தக்கவாறு அவன் வந்து கலவி புரியாமல் அலட்சியமாக இருத்தலையும் நோக்கின திருத்தாயார் எம்பெருமானை நோக்கி 'பிரானே, இவளை நீ இங்ங் னம் நோவுபட விட்டிருப்பது தகுதியோ? பரத்துவத்தின் மேல் எல்லையில் நிற்கின்ற நமக்கு இப் பெண்பிள்ளை ஒரு பொருளோ? என்று அலட்சியமாக இவளை நினைத் திருக்கிக்கின்றாய் போலும்; இதுதானோ உன்னுடைய பெருமைக்குத்தகுவது?’ என்று ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு பழமொழியை எடுத்துரைத்துப் பேசுகின்ற முகத்தால் ஆழ்வார் தம்முடைய காதலின் மிகுதியையும் அலட்சியம் செய்யாமல் கடுகக் கைப்பற்றியாக வேண்டும் என்பதையும் விண்ணப்பம் செய்வதாக அமைந்துள்ளது