பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 381

கிறபடியாலே எம்பெருமானை அநுபவிப்பதில் ஆழ்வா குக்கு விரைவு உண்டானமையும் நாம் பதறக் கூடாது" என்கின்ற தீர்மானம் மற்றொரு புறத்தில் உண்டானமை யும் விளங்கும். தன் சொரூபத்தை நோக்குமளவில் தீர் மானம் உண்டாகும்; அவனுடைய தனிச் சிறப்பை நோக் குமளவில் பதற்றம் உண்டாகும்.

பொங்கார்மேல் இளங்கொங்கை பொன்னே பூப்பப்

பொருகயற்கண் நீர் அரும்பப் போந்து நின்று செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும்

சிறுகுரலுக்கு உடலுருகிச் சிந்தித்து ஆங்கே தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர் பாடி ஆடக் கேட்டு 'நங்காய்! நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன

நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே! (17).

{டொங்கு-வளரும்; பொன்-பசலை; கயல்கெண்டை செங்கால-சிவந்த கால்களையுடைய: ஆட-கூத்தாட குடி-குலம்}

என்பது பதினேழாம் பாசுரம். தன் மகள் சோர்வுற்ற நிலையைக் கண்ட திருத்தாயார். இவளுக்கு நாம் ஏதே னும் இதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அத னாலாகிலும் வழிப்படக் கூடுமோ” என்றெண்ணி 'நங் காய் நீ இங்ங்ணம் வாய்விட்டுக் கூப்பிடுதலும் மோகித் தலுமான இவை நின்பெண்மைக்குத் தகாது, நம் குடிக்கும் இழுக்கு’ என்று சொல்ல, அங்கனம் அவள் இதம் சொன் னதுவே ஏதுவாக மேன்மேலும் அதிகமாக முயன்று பணைத்த படியைச் சொல்லுகிறது. இப்பாசுரம்.

பொங்கார் மெல்லிளங் கொங்கை பொன்னே பூப்பு: காதல் நோயால் உடலில் தோன்றும் நிறவேறுபாடு