பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பரகாலன பைந்தமிழ்

பொன்பூத்தலாகச் சொல்லப்படும்; பசலை நிறம் என்பது வும் இதுவேயாகும் 'ஊருண்கேணி (399) என்ற குறு; தொகைப்பாடல் இது பரவுவதை விளக்குகின்றது.

பொருகயல் கண்ணிரரும்ப போரிடும் கெண்டைகளா கக் கண்கள் வருணிக்கப்படும். அப்படிப்பட்ட கண்கள் நீர் பெருகி நிற்கும். காதலிகளின் கண்களில் நீர்பெருதல் எடு போதும் உள்ளதொன்று. கலவி நிகழும் காலத்தில் ஆனந் தக் கண்ணிர் பெருகும். பிரிந்து வருந்துங் காலத்தில் சோகக் கண்ணிர் பெருகும்.

போந்து நின்று: நாயகனே வந்து மேல்விழ வேண் டும்படியான முலையழகையும் கண்ணழகையும் உடைய நீ மேல் விழுதல் பெண்மைக்குத் தகாது’ என்று அன்னை சொன்ன இதம் செவியைச் சுடுவதாக இருந்தது. நெருப் புப் பட்ட வீட்டில் நின்றும் பதறிப் புறப்படுமாப்போலே அத்தாய் இருந்த அகத்தில் நின்றும் சடக்கெனப் புறப் பட்டாள்.

நின்று: தரிப்புப் பெற்று நின்று என்றபடி. புறப்பட்ட வாறே கால் பரவி நின்றாள்.

செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக்கு உடல் உருகிச் சிக்தித்தாங்கே பாம்புக்கு அஞ்சி யோடின வன் புலியின் வாயிலே விழுந்தாற்போலேயாயிற்று. தாயின் வாய்ச் சொல் பாதகமாயிருக்கிறதென்று வெளி யில் வந்தவளுக்கு அதனிலும் கொடிய சொல் செவியில் விழுந்தது. அதாவது, புறா ஆனும் பெண்ணும் கூடிக் கொஞ்சும் பேச்சுகள் அவள் செவியில் பட்டன! "அந்தோ! இவையும் கூடத் தம் விருப்பம் நிறைவேறப் பெற்றுக் களித்து வாழா நிற்க, நம் நிலைமை இப்படியா யிற்றே!' என்று உடல் உருகினாள். பண்டு அவனும்