பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 40]

குடிபுகுந்கு தழுதழுத்த தம் குரலினால் கொலை செய்கின் றனவே என்கின்றாள்.

மடலூர்தல் : தொல்காப்பியத்திலும் அகத்தினை இலக்கியங்களிலும் காதலர்களிடம் காணப்பெறும் . அவர்கள் கையாளும் - ஒருவித இலக்கிய மரபு. இதனைப் பரகால நாயகி இறைவன்பாற் காதல் கொண்டு இம் மரபினைக் கையாள நினைக்கின்றாள். நாயகனை ஒரு படத்தில் எழுதி, வைத்தகண் வாங்காமல் அதைப் பார்த்துக் கொண்டு மலர்கள் சந்தனம் முதலிய போகத் திற்குரிய பொருள்களை நஞ்சாக உதறித் தள்ளிவிட் இ, எருக்கம்பூ மாலையைச் சூடிக்கொண்டு, ஊனும் உறக்க மும் நீராடலும் இன்றி, தலைமயிரை விரித்த நிலையில் பனங்கருக்கலான ஒரு குதிரையேறி நான்கு தெருக்கள் கூடும் சந்திக்கு வருவார்கள் காதலர்கள். வந்து 'இன்ன படுபாவி என்னைக் காக்காமல் கைவிட்டான்; அவன் கண்ணற்றவன்; அவனிலும் விஞ்சிய கொடியவன் இல்லை; பல திருத்தலங்களில் அவன் சந்நிதி பண்ணி அடியாரைக் தாக்கின்றான் என்பதும் இராமகிருஷ்ணாதி அவதாரங்களினால் பலரைக் காத்தான் என்பதும் முழுப் பொய்யான உரைகள்” என்று கதறிக் கொண்டு கேட்டா ரெல்லாரும் நடுங்கும் படியும் இரக்கம் கொள்ளும்படியும் திரிந்துழல்வதே மடலூர்தல் என்பது. இப்படிப்பட்ட முறையைக் கையாண்டாகிலும் எம்பெருமானை அணையப் பெறலாம் என்று கருதினாள் பரகால நாயகி. பனைமடல் கொள்ளுதற்காகப் பனை மரத்தருகில் சென்ற பொழுது அன்றிலின் அரிகுரலைச் செவியுற்றுக் கூறினாள் போலும்.

அன்றில் : அன்றில் என்பது ஒரு பறவை. அது பெரும்பாலும் பனைமரத்தில் வாழும். அது எப்பொழு

ւյ. Յեո-26