பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் - தூது பற்றியவை 423

தானாக நினையானேல்

தன்னிணைந்து நைவேற்குஓர் மீனாய கொடிநெடுவேள்

வலிசெய்ய மெலிவேனோ? தேன்வாய வரிவண்டே!

திருவாலி நகராளும் ஆனாயற்கு என்னுறுநோய்

அறியச்சென்று உரையாயே (3. 6: 4)

(நைவேற்கு - மனந்தளர்ந்திருக்கும் என்னை; மீனாய கொடிநெடுவேள் - மகரக் கொடியுடைய மன்மதன்)

உடையவன் உடைமையை விட்டுப் பிரிந்தால் ஐயோ! உடைமையை இழந்தோமே! மீண்டும் அதனைப் பெற வேண்டுமே! எப்படிப் பெறப் போகின்றோம்" என்று துணுக்குத் துணுக்குற்றிருந்து சொத்தின் மேலேயே கருத்துன்றியிருக்க வேண்டுவது முறைமை; இந்த முறை மையை எம்பெருமான் நோக்குகின்றிலன்; தன் சரக்காகிய என்னைப் பிரிந்து கவலையற்றிருக்கின்றானே; உடைய வன் கவலையற்றிருந்தானாகிலும் உடைமை கவலை கொள்வது நியாயமன்று; அசேதநமாய் இருந்து விட்டால் கவலை கொள்ளாதிருக்கலாம்; உணர்வு உண்டாகை யாலே கவலை கொள்ளாதிருக்க முடியவில்லை என்பது முதலடியின் கருத்து நாம் அவனைப் போலே யாக மாட்டோமே; நாமும் நினையாமைக்கு ஒரு நெஞ்சு படைக்கப் பெற்றிலோம்' என்பது வியாக்கியான சூக்தி,

ஒரு மீனாய கொடி நெடுவேள் வலிசெய்ய மெலி வேனோ? : அப்பெருமானை நினைந்திருப்பதே குற்றமாக மன்மதன் என்னை நோவுபடுத்துகின்றானே, நல்லதோ கெட்டதோ எம்பெருமானாலே விளைவதாக இருந்தால் சகிக்கலாம், தாங்கிக் கொள்ளலாம்; இடையில் மதன