பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 பரகாலன் பைந்தமிழ்

جحديديميسسم سا–

காதல் போலன்று. அயர்வறும் அமரர்கள் அதிபதியி: காதல் போலும் அன்று என்னுடைய காதல் என், சொல்லுவதே சிறந்தது. 'பரதாழ்வானுடைய நோய்: என்றால் மிகச் சிறந்ததென்று புகழ் பெற்றதன்றோ? அது போலே.

உரைத்தியாகில் : அங்குச் சென்றவாறே அவருடைய வடிவழகாலே கால் தாழ்ந்து போன காரியத்தை மறது. கவும் கூடும்; தன்னையும் மறக்கும் படியாக அன்றோ அல் விடத்து இனிமை இருப்பது? அப்படிப்பட்ட அந்த வடி வழகில் கால் தாழாமல் தரித்து நின்று என் காதலை அவர் பக்கலில் உரைக்கவல்லையாகில் என்கின்றாள். ; வாய்படைத்தற்கு இதுவன்றே பயன்? பல வார்த்தை களையும் சொல்லி வருகிற உன் வாயிலே என் விஷயமாக இந்த ஒரு வார்த்தை வந்தாலாகாதோ?’ என்கின்றாள்.

"நான் சொன்ன மாத்திரத்தில் அவர் வந்திடுவாரோ? என்று நாரை சொல்ல, உரைத்தியாகில் இது வொப்டி தெமக்கில்லை’ என்கின்றாள். அவர் வரட்டும், வராமல் போகட்டும்; நீ அவரிடம் சென்று என் காதலைச் சொல் லுவதே எனக்குப் பரமானந்தம் என்கின்றாள். அவர் பரம சேதநரன்றோ? துர்துரை செவிப்பட்டால் வாரா தொழிவரோ? வந்தே தீருவர்' என்றிருக்கின்றாள்.

எனக்காகச் சென்று துாதுரைத்தல் மாத்திரம் போதாது; அவ்வுபகார வ |ா க் காலே நான் உனக்குச் செய்யும் சிறிய உதவியையும் அங்கீகரிக்க வேண்டும்' என்கின்றாள். நாளும் பைங்கானம் ஈதெல்லாம் உனதேயாகப் பழனமீன் கவர்ந்துண்ணத்தருவன்: பிரிந்தார் இரங்கும் இடம் நெய்தல் நிலமாகையாலே கடற்கரை யிலேதான் இருக்கின்றாளாய், பரப்புடைத்தான கடற். கரைச் சோலையெல்லாம் எந்நாளும் உன் வசத்திலிருக் கும்படி பண்ணிவைப்பேன்; ஆனைக்கன்று போலேயிருக் கின்ற மீன்களை நீ மேல் விழுந்து புசிக்கும்படியாகச்