பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் - துரது பற்றியவை 435

(சேகரித்துத் தருவேன்' என்கின்றாள். இவ்வாறு புருஷ காரக் கிருத்தியம் பண்ணி பகவத் விஷயத்திலே சேர்ப்பிக் கும் ஆசாரியனுக்கு 'பொன்னுலகாளிரோ' (திருவாய் 6.8:1) என்னுமாப்போலே உபய விபூதியும் அளித்தாலும் தகும் என்றதாயிற்று. ஆசாரியன். ஒருகால் உபகரித்து தான் விடுவர்; சீடன் வாழ்நாள் உள்ள அளவும் அதனைச் சொல்லிக்கொண்டே இருக்கக் கடவன் என்ற சாத்திரப் பொருளும் இதில் விளங்கக் காணலாம். பழனமீன் கவர்ந்து உண்ணத் தருவன்’ என்றதன் உள்ளுறைப் பொருள் : நாரைக்கு மீன் எப்படி இனிதோ அப்படி ஆசாரியனுக்கு உகப்பான பொருளைத் தந்து சிறு நன்றி யையாவது செலுத்த வேண்டும் என்பதாகும்.

தந்தால், இங்கே வந்து இனிதிருந்து உன்பெடையும்’ நீயும் இருநிலத்தில் இனிதின்பம் எய்தலாம் : நான் பண்ணின சிறிய உபகாரத்தை ஏற்றுக்கொண்டு நான் இருந்த இடத்தே வந்து புசிக்க வேண்டும்; தனியாக வந்திருக்க ஒண்ணாது. அபிமத விஷயத்தோடே கூட வந்திருக்க வேண்டும். நான் தனியே கிடந்து படுகின்ற வருத்தம் தீர உன்னையாவது கூடியிருக்கும் இருப்பிலே காணப்பெற வேண்டும். இவ்வாறு நானும் வாழ்ந்து நீயும் இனிது வாழ்ந்து நோக்க வேண்டும்” என்கின்றாளா யிற்று.

புள்ளினங்களைத் தூது விடுவது : திருப்புல்லாணி வரை சென்று தொழவேண்டும் என்று முயன்ற பரகால நாயகி யின் முயற்சி பயன்படவில்லை. கால் நடை தாராதபடி தளர்ச்சி வுண்டாயிற்று; ஆகவே கண்ணிற் கண்ட பறவை களைத் துதுவிடுகின்றாள்.

முன்னம் குறளுருவாய்

மூவடிமண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே

மாலாகில் பொன்பயந்தேன்;