பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. ஆழ்வாரின் இறையநுபவம்

இறைவனுடைய அடியார்கள் இறைவனை அநுபவித் தல் பலவகைப் பட்டிருக்கும். சிலர் அவனுடைய திரு நாமங்களைச் சொல்லி அநுபவிப்பர். சிலர் அவனுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிச் சொல்லி அநுப விப்பவர்” இன்னும் சிலர் இறைவனுடைய வடிவழகை வருணித்துப் பேரின்பம் கொள்வர். மேலும் சிலர் இறை வன் கோயில் கொண்டருளின திவ்விய தேசங்களின் வளங் களைய் பேசியும், அவ்விடங்களில் அபிமானமுள்ள வைன வர்களின் பெருமையைப் பேசியும் அதுபவிப்பர். இவை தவிர நாயகி சமாதியை ஏறிட்டு கொண்டு வேற்று வாயாலே அநுபவிக்கும் நிலைமை ஒன்று உண்டு. இங் வனம் இறைய நுபவம் பலவகையாக நிகழ்வதை ஆழ்வார் களின் பாசுரங்களில் கண்டு மகிழலாம். அன்றியும், இந்த ஆழ்வாரின் பாசுரங்களை ஆழ்ந்து கற்போர் அவ ரது பகவதநுபவம் இரண்டு வழிகளில் செல்வதைக் காண லாம். இவரிடம் ஞானதலைதுாக்கி நிற்குங்கால் தாமான தன்மையில் (அதாவது ஆழ்வாராகவே நின்று) இருந்து கொண்டு இறைவனை அநுபவித்து அந்த அநுபவத்தைப் பாசுரங்களாக வெளியிட்டுள்ளார். அந்த அநுபவம் பல் வேறு விதமாக வெளிப்பட்டதை இந்தஇயலில் விரித்துரைக் கப் பெறுகிறது. பிரேமம் (காதல்) முறுகி மீதுார்ந்து நிற் குங்கால் பிராட்டியின் தன்மையை ஏறிட்டுக் கொண்டு வேற்று வாயாலே பெண் பேச்சாகப் பாசுரங்களாக வெளி