பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

螺5别 பரகாலன் பைந்தமிழ்

ཕ───────མས། ལམ་བཟང་།e

கள் சுற்றிலும் சூழ்ந்து வணங்கி நிற்க வந்தார்; வாயில் நல்வேதம் ஓதும் வேதியர் என்று விளங்கும்படி வேதங் களை ஒதிக்கொண்டு வந்தார்; அருகில் பெரியபிராட்டி யார் தேவியாகத் திகழ்ந்தனள், இருபுறத்திலும் திருவாழி திருச்சங்குகள் பொலிந்தன; கருநெய்தற் பூவோ! கடல் தானோ என்னும்படியான வடிவு தோன்றிற்று; அவ்வடி வழகுக்கும் கண்ணழகுக்கும் எல்லை காண முடியவே இல்லை. என்னுடைய உயிர்த்தான் இங்ங்னம் உரு வெடுத்து வெளித்தோன்றுகின்றதோ என்று நினைக்கும் படிக்காதல் அன்புக்கு இலக்காக இருந்தார்’ என்கின்றாள் ஆழ்வார் நாயகி.

ஆழ்வார் நாகை அழகியாரின் சொக்கும் அழகில் உள்ளத்தைப் பறிகொடுத்து உருவெளிப்பாட்டில் கண்ட ஆழ்வார் நாயகி அவரை,

வம்பவிழுந்துழாய் மாலை தோள்மேல்; கையன ஆழிவும் சங்கும் ஏந்தி நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்;

நாகரி கர்பெரிதும்இளையர் செம்பவ ளம் இவர் வாயின் வண்மை தேவர் இவர துருவம் சொல்லில் அம்பவ ளத்திர ளேயும் ஒப்பர் (9.2:4)

(வம்பு-பரிமளம், ஆழி-சக்கரம், கையன-கையி

லுள்ளன; நம்பர்-சுவாமி, வண்ணம்-நிறம்:

என்று வருணித்திடுவள். மணம் கமழுகின்ற திருத்துழாய் மாலையை இரண்டு தோள்களிலும் அணிந்துள்ளார்; இருக்கைகளிலே திருவாழி திருச்சங்குகளைப் பூவேந்துமாப் போலே ஏந்தியுள்ளார்; இப்படிப்பட்ட பரத்துவ நிலையி லுள்ளவர் நாம் இருக்கும் இடத்தே வந்து புகுந்துள்ளார்: பரம ரசிகராயும் உள்ளார்; இனம் பருவமுடையவர். இவ ருடைய திருப்பவளம் சிறந்த பவளம்போல் உள்ளது.