பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 பரகாலன் பைந்தமிழ்

மாறி எம்பெருமானே! எமக்கு அருள் புரியவேண்டும்' என்று பிரார்த்திக்கும்படி அங்குப் பள்ளி கொண்டருளும் பெருமான்' என்று அநுபவிப்பதைக் கண்டு மகிழலாம்.

திருவழுந்துார் எம்பெருமானை மங்களாசாசனம் செய்யும் பாசுரம் ஒன்றில்,

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்

திருவடியின் இணைவருட முனிவர் ஏத்த

வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன் என்னும்

வரி.அரவின் அணைத்துவின்ற மாயோன் (7. 8: 1)

(செங்கமலம் - செந்தாமரை, திருமகள் - பெரிய பிராட்டியார், புவி - பூமிப் பிராட்டியார்; வருட தடவ: வங்கம் - கப்பல்கள்; அநந்தன் - ஆதி சேடன்)

என்றுவியூக மூர்த்தியை அநுபவிக்கின்றார். 'செந்தாமரை மலரில் வாழ்கின்ற சீதேவியும், பூதேவியும் தனது இரண்டு திருவடிகளை வருடவும், மாமுனிவர்கள் புகழ்ந்து துதிக்க வும் அலைகள் நிரம்பிய திருப்பாற்கடலில் திருவனந்தாழ் வான் என்ற புள்ளிகளையுடைய பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொண்டிருக்கும் ஆச்சரியமான குணமுடைய வன் திருவழுந்துாரில் அர்ச்சை வடிவமாக எழுந்தருளி யுள்ளான்' என்கின்றார்.

அவதாங்களை அநுபவித்தல் : இந்த ஆழ்வார் எம்பெருமானின் அவதாரங்களில் ஈடுபட்டு அநுபவிப்பது அற்புதமாக இருக்கும்.

சிலம்பின் இடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்ப திருஆ காரம் குலுங்க, நிலமடந்தை தணைஇடந்து புல்கிக்

கோட்டிடைவைத் தருளியளம் கோமான்

கண்டீர் (4.4:8)