பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையதுபவம் 46 Í

அலைகடல் நீர்கு ழம்ப அகடாட

ஒடி அகல்வான் உரிஞ்ச முதுகில்

மலைகளை மீது கொண்டு வருமீனை

மாலை மறவா திறைஞ்சென் மனனே (11, 4: 1) (நிலையிடம் - நிலைத்து நிற்கும் இடம்; நெடு வெள்ளம் - பிரளய வெள்ளம்; உம்பர் - மேலுல கம்; இமையோர் - தேவர்கள்; த ைல யி ட - தலை வணங்கி இரக்க, சரண் - புகலிடம்; வான்ஆகாயம்; அகடு - வயிறு)

என்ற பாசுரம் முழுதும் மச்சாவதார அநுபவமாக அமைந்தது. ஒரு பிரமகல்ப முடிவில் பிரமசம்பந்தமான நைமித்திகப் பிரளயம் உண்டான பொழுது பூமி முதலிய உலகங்கள் கடலால் சூழப்பட்டு மூழ்கும் சமயத்தில் உறக்கம் தெளிந்தெழுந்து அந்த நீரில் படுக்க முயன்ற நான்முகனின் முகத்தினிறு கிளம்பிய நான்கு மறைகளை யும் அயக்கிரிவன் என்னும் தானவன் அபகரித்துக் கொண்டு சென்று விட்டான். அப்பொழுது எம்பெருமான் இலட்ச யோசனை நீளமும் பதினாயிரம் யோசனை பருமனும் ஒற்றைக் கொம்பும் பொன்மயமான நிறமும் உள்ளமீன் வடிவமாக மக்கள் எல்லோரையும் கவரவல்ல உருவம் கொண்டு அண்டகடாகத்தளவும் செல்லத் துள்ளி விளையாடி முன்பு தானவன் கவர்ந்து சென்ற நான்மறை களையும் மீட்டுக் கொடுத்ததுமன்றி மக்களையும் பிறவற் றையும் பிரளயாபத்தினின்றும் காத்தது மச்சாவதார வரலாறு.

நரசிம்மாவாதாரம்: பல்வேறு பாங்கில் இந்த அவ தாரத்தை அநுபவிக்கின்றார்.

திண்ணியதோர் அரியுருவாய் திசையனைத்தும்

நடுங்க, தேவரோடு தானவர்கள திசைப்ப இரணியனை நண்ணியவன் மார்பகலத் துகிர்மடுத்த நாதன் (3.9:2)