பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ் வாரின் இறையநுபவம் 467

நாயகனும் அநந்த கல்யாண குணங்கட்குக் கொள்கல மாக இருப்பவனும் ஒரு காலத்தில் எல்லா உலகங்களை யும் திருவயிற்றிலே வைத்துக் காப்பாற்றியவனுமான பெருமான் நம்மை நீடுழிகாலம் அடிமை கொள்வான் என்று சொல்லி அநுபவிக்கின்றார்.

இராமாவதாரம் : இந்த எம்பெருமான் மானிட யோனியில் அவதரித்து மக்களிடையே வாழ்ந்து, பன்னெ டுங்காலம் அரசு செலுத்தி வந்ததனால் ஆழ்வார்கள் வாக்கில் அதிகமாக இடம் பெறுகின்றான்.

கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி

கணையொன்றி னால்மடிய இலங்கை தன்னுள் பிறை யெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம்

பெருந்தகையோ டுடன்துணித்த பெம்மான்

(2-10;5}

(கறை-குருதிக் கறை, கணை-அம்பு பிறை எயிறு -பிறைபோன்ற கோரப்பல்; பெருந்தகைஇராவணன், பெம்மான்-பெருமான்'

திருக்கோவலூர் எம்பெருமானைக்குறிப்பிடுங்கால் இந்த அவதார எம்பெருமானை அதுசந்தித்து அகமகிழ் கின்றார். அர்ச்சையும் அவதாரமும் ஒன்றே என்பது கருத்து.

சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரிந்த

கொடுமையிற் கடுவிசை அரக்கன் எரிவிழித்து இலங்கும் மண்முடி பொடி செய்து

இலங்கைபாழ் படுப்பதற்கு எண்ணி வரிசிலை வளைய, அடுசரம் துரந்து,

மறிகடல் நெறிபட மலையால், அரிகுலம் பணிகொண்டு அலைகடல்

அடைத்தான் (5,7:7)