பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 பரகாலன் பைந்தமிழ்

பிறந்திருந்தாலும் அவர்களின் செயல்கள் ஆழ்வார்களின் பாசுரங்களில் அதிகமாக இடம் பெறவில்லை. காரணம், அவதார இரகசியம்’ என்ற தத்துவத்தை அடிப்படை யாகக் கொண்டது. அவதாரம் கெளனாவதாரம், (அதாவது ஆவேச அவதாரம்) சாட்சாத் அவதாரம் என்று இருவகைப் படும். கெளனாவதாரம் அகங்காரத் துடன் கூடிய சீவர்களை அடங்கி ஒடுக்குவதற்காக ஈசுவரன் ஆவேசமுகத்தான் அநுட்டித்து நிற்பது. பரசு ராமன் அவதாரம் அந்த வகையைச் சேர்ந்தது. இந்த அவதாரம் rத்திரியர்களின் அகந்தையை அடக்குவதற் காகவே எடுக்கப்பெற்றது. பலராமன் கடவுளின் அவதாரம் அன்று. ஆதிசேடனே அவனாக வந்து தோன்றியதாக ஐதிகம். பலராமனுக்கு மதிப்பு அதிக மாக இருந்தது. ஆவேசவாதாரத்தை முமுட்சுக்கள் (மோட்சத்தில் விருப்பமுள்ளவர்கள்) உபாசித்துப் போற்றுவதில்லை. ஆனால் பு:பூட்சுக்கள் (சம்சாரிகள்) போற்றுவர்.

உலக உருவாயவன் : சீமந் நாராயணனே முழுமுதற் கடவுள். அவன் உலகஉருவாய் இருப்பவன். திருவரங்க. நாதனை மங்களாசாசனம் செய்யும்போது,

பண்டை நான்மறையும், வேள்வியும், கேள்விப்

பதங்களும், பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும்,

பெருகிய புனலொடு நிலனும், கொண்டல்மா ருதமும், குரைகடல் ஏழும்

ஏழுமா மலைகளும் விசும்பும் அண்டமும் தானாய் நின்றனம் பெருமான் (6. 7: 1)

(மறை-வேதம்; கேள்விப்பதங்கள்-வியாகரணம்: பிண்டமாய் விரிந்த-பிண்ட உருவாக இருந்து