பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

垒韶2 பரகாலன் பைந்தமிழ்

அண்ட வாணர் உகப்பதே செய்தாய்:

அஞ்சி னோம்-தடம் பொங்கத்தம்

பொங்கோ (3)

1அன்று-வனவாசகாலத்தில்: தையலை-பிராட்டி யை; தகவு இலி-ஈர நெஞ் சற்றவன் கெட்டான். முடிந்தான்; இங்கு-இதில்; கொல்லேல்-கொல் ல்ற்க; பெண்டிரால்-பெண் சாபத்தால், குடிஇராக்கதர் குலம்; பேசுகின்றது-பேசுவதற்கு; அண்ட வாணர்-தேவர்கள்: உகப்பதே-மகிழக் கூடிய காரியத்தையே)

என்ற மூன்றாம் பாசுரம் அரக்கர்கள் இராமபிரானை விளித்து தங்கள் தோல்வியும் இராமபிரானது வெற்றியும் தோற்றச் சொல்லிக் கூத்தாடுகின்றனர்.

'குற்றமற்றாரை நலியாத இட்சுவாகுமரபின் அணி விளக்காக அவதரித்த பிரானே! எங்கள் இராவணன் தனக்கு ஒருவகையான தீங்கும் செய்யாத உம்மிடத்தில் தானே வீண்பகைகொண்டு நெடுந்தொலைவு கடந்து தண்டகாரணியத்திடல் புகுந்து சிறிதும் ஈர நெஞ்சு இள நெஞ்சு இல்லாதவனாய் அழகில் சிறந்த பிராட்டியைக் கவர்ந்து கொண்டு வந்து சேர்ந்தான்; இக் குற்றத்தை அவன் மட்டிலும் செய்தானேயன்றி நாங்கள் அவன் செயலில் ஈடுபடவில்லை. நாங்கள் அவனுடைய சேவகர் களாகையால் அவன்கீழ்க் குடிவாழ்ந்த குற்றவாளிகளே யன்றி பிராட்டியைக் கவர்ந்த செயலில் நாங்கள் குற்ற வாளிகள் அல்லோம். ஆதலால் எங்களைக் கொல்லா தொழிய வேண்டும். பொருள் நசையே காரணமாகக் கொண்டு கெட்டொழியும் இவ்விழி குலத்தைப் பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும்? தேவரீருடைய அடியார் களான தேவர்கள் இராவணனால் தொல்லைப் பட்டவர் களாதலால் அப்பாவி தொலைவது என்றோ?' என்று