பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தத்துவக் கருத்துகள்

பக்தி இலக்கியங்களைத் தோத்திர நூல்கள், சாத்திர நூல்கள் என இருவகையாகப் பகுத்துப் பேசலாம். சாத்திர நூல்கள் தத்துவங்களை விளக்குவதற்காக எழுந்தவை. ஆதலால் அவற்றில் தத்துவங்கள் அளவை முறையில் கோவையாக எடுத்து விளக்கப் பெறும். தோத்திர நூல்கள் எம்பெருமான் புகழ் பாடுபவை; பக்திச்சுவை நண் சொட்டச் சொட்ட, கேட்போர் பாடு வோர் நெஞ்சில் அது ஊற்றெடுக்கப் பாடப்பேறுபவை. இவற்றில் தத்துவக் கருத்துகள் கோவைப்பட அமைந் திருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. அவை ஆங் கொன்றும் ஈங்கொன்றுமாக அமைந்து பாசுரங்களுக்கு வளஞ்சேர்ப்பவையாக அமைந்திருக்கும். திருமங்கை யாழ்வாரின் அருளிச் செயல்களை ஆழ்ந்து கற்கும்போது, ஆழங்கால்படும்போது - இந்த உண்மை தெளிவாகும் ஆகவே, இந்த இயலில் வைணவதத்துவம் இன்னதென விளக்கி, அதன் அடிப்படையில் ஆழ்வாரின் அருளிச் செயல்களில் தத்துவக் கருத்துகள் அமைந்திருக்கும் பாங்கினைச் சுட்டி விளக்க முற்பட்டால் தத்துவக் கருத்துகள் அநுபவமாகித் தெளிவுபெறும். பாசுரங்க ளும் தேனாக இனிக்கும். எம்பெருமானும் "அடியவர் தங்க ள் உள்ளத்துள் ஊறிய தேனாக இருப்பதைக் காட் டும் போக்கில் தட்டுப்படுவான்.