பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮞ88 பரகாலன் பைந்தமிழ்

நீள் நாகம் சுற்றி நெடுவரைநட்டு ஆழ்கடலைப் பேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை பூனார மார்வனைப் புள்ளுறும் பொன்மலையைக் காணாதார் கண்ணென்றும் கண்அல்ல கண்டாமே

(11. 7: 1). (நீள்நாகம்-வாசுகி, வரை-மலை; நட்டு-நாட்டி; பேணான் - மதியாதவனாகி; உகந்த - மனம் மகிழ்ந்த, புள்-கருடன்; என்றும்-ஒருநாளும்; கண்டாம் அறிவோம்)

என்பது முதற் பாசுரம். எம்பெருமானைச் சேவிக்கப் பெறாதவர்களுடைய கண்கள் ஒருநாளும் கண்களல்ல. என்கின்றார். 'கரியவனைக் காணாத கண்னென்ன கண்ணே, கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்னென்ன கண்னே' என்பது சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை) இங்ங்னமே ஒவ்வோர் உறுப்புகளின் பயனையும் எடுத்துக் காட்டி தாம் எம்பெருமானை அநுபவிப்பதுடன் மற்றவர் களையும் அம்முறையில் ஆற்றுப்படுத்துகின்றார். இவ் விடத்தில் பெரியாழ்வார் யசோதை பாவனையில் கண்ண னது திருமேனியழகை (1. 2) திருப்பாதம் தொடங்கி திருக்குழல்கள் வரையில் ஒவ்வோர் உறுப்பையும் அநுட. விப்பதை நினைக்கின்றோம். அன்றியும், நாவுக்கரசரின் திருவங்க மாலையும் (தேவா. 4. 9) ஒப்பு நோக்கி அநுப வித்து மகிழத்தக்கது.

இங்ங்னம் ஆழ்வாரின் இறையநுபவம் பலவிதங்களில் நடைபெறுகின்றதைக் கண்டு நாமும் அதில் ஆழங்கால் படுகின்றோம்.