பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 493

அதுவாக நினைக்கும் விபரீத அறிவினையும் விளைவிக்கும் இஃது உற்பத்தி, விநாசம் இல்லாதது. ஈசுவரனுடைய உலகப் படைப்பு முதலியவற்றிற்கு விளையாட்டுக் கருவி யாக இருந்து, ஏற்றத்தாழ்வு உள்ள இடம். அவை இல்லாத இடம் என்ற வேறுபாட்டாலும், அழிக்கும் காலம் படைப்புக் காலம் ஆகிய இரண்டு வகையான கால வேறுபாட்டாலும், சூக்கும விகாரங்களையும் துால விகாரங்களையும் உண்டாக்கக் கடவது. இந்த மிச்ரதத் துவம் அவித்யை, மாயை, திரிகுணம் என்ற பெயர் களாலும் வழங்கப்பெறும்.

இந்த மிச்ரதத்துவம் இருபத்து நான்கு வடிவங்களாக இருக்கும். அதாவது சேதநரைப் பூரிக்கச் செய்யும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், ஆகிய புலன்கள் ஐந்தும்; வாக்கு, கால், கை, வாய், எருவாய் (உபத்தம்) ஆகிய கருமேந்திரியங்கள் ஐந்தும், மண், நீர், எரி, கால், ஆகாயம் என்னும் பூதங்கள் ஐந்தும்; இங்குள்ள, தளைப் பட்டுள்ள (பத்தான்மாக்கள்) ஆன்மாக்கள் பொருந்தி யுள்ள மூலப்பிரகிருதி ஒன்றும்; மகத் (மான்) தத்துவம் ஒன்றும்; அகங்கார தத்துவம் ஒன்றும் மனம் ஒன்றும் என இருபத்து நான்காம், இந்த இருபத்து தத்துவங்களை யும் கலந்துதான் ஈசுவரன் தானாகவும் நான்முகன் மூலமாகவும் இந்த அகிலத்தைப் படைக்கின்றான்."

சத்துவ சூனியம்: இது காலத்தத்துவம் என்று வழங்கப் படும். இஃது எங்கும் பரவி நிற்கும் ஒரே திரவியம்.

2. புருடன் (ஆன்மா, புருடோத்தமன் (பரமான்மா) ஆகிய இரண்டும் சேர்ந்து வைணவ தத்துவம் 26 ஆகின்றது.

3. மேலும் விளக்கத்திற்கு இந்த ஆசிரியரின் முக்தி

கெதி பக் (40-43) காண்க.