பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 பரகாலன் பைந்தமிழ்

இதில் சத்துவம் முதலிய பிரகிருதியின் மூன்று குணங்களும் இல்லை. எதிர், நிகழ், கழிவு முதலிய விவகாரங்களுக்கும இதுவே காரணம் ஆகும். நிமிடம், வினாடி, நாழிகை முதல் பரார்த்தம் வரையிலுள்ள பகுதிகள் எல்லாம் இத. இதனுடையனவே. இஃது ஈசுவரப் படைப்பில் பரிணா மங்களுக்குக் காரணமாய், தோற்றம், ஈறு, அற்றதாய், அவனுடைய படைப்பு, அளிப்பு, அழிப்பு ஆகிய விளை யாட்டிற்குக் கருவியாய் அவனுக்கு உடலாகத் திகழும். வைகுந்தத்தில் முன்பின் என்ற அளவிற்குக் காலம் உளதா யினும் அதன் சம்பந்தம் இன்றி அனைத்தும் எம்பெரு, மானது சங்கற்பத்தினால் மட்டிலும் நடப்பனவாகும்.

ஈசுவரன்: சீமந் நாராயணனே முழுமுதற் கடவுள்; சாவேசுவரன். இவன் எப்பொழுதும் மாறுபாடத் தன்மை யுடையவன், சத்தியம், ஞானம், ஆனந்தம், அனந்தம் இவற்றின் சொரூபமாக இருப்பவன். இடத்தாலும் காலத்தாலும் அளவிடப்பெறாதவன். அந்தமில் ஆதி அம் பகவன்’ (திருவாய் 1.3:5). எங்கும் நிறைந்திருப் பவன். உடல் மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந் துளன்' (டிெ 1 1:7). மூன்றுவிதசேதந அசேதந பரிணாம ரூபமான வேறுபாட்டின் குறைகள் (விகார தோஷங்கள்): தட்டாதவன்.

பிறப்பொடு மூப்புஒன்று இல்லவன் தன்னைப்

பேதியா இன்பவெள் ளத்தை இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை (4.3.2)

(பேதியா-விகாரமடையாத)

என்று குறிப்பிடுவர் பரகாலர்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வகைப் பட்ட பலன்களையும் உயிர்கட்குத் தந்து அவற்றின் புகலி