பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 49 %

பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமு. மாய்ப் பரந்து நின்ற ஒன்றேயான சோதியாகும். என்பது உறுதியாகும்.

எம் அடிகள் உருவம் முகில் உருவம் : மாக்கடல் உருவம்' என்றதையே இங்கு முகிலுருவமே' என்று திரும்பக் கூறுகின்றார்கருத்தை வற்புறுத்துவதற்கு ம்ேலும் இந்த ஆழ்வார்,

யாவருமாய் யாவையுமாய்

எழில்வேதப் பொருள்களுமாய் மூவருமாய் முதலாய

மூர்த்தி (4. :: 2)

என்றும்,

வான் நாடும் மண் நாடும்

மற்றுமுள்ள பல்லுயிரும் தானாய எம்பெருமான்

தலைவன் (4. 1. 3) என்றும்,

தன்னாலே தன்உருவம் பயந்த தானாய்த்

தயங்கொளிசேர் மூவருக்கும் தானாய் வானாய் தன்னாலே தன்உருவம் மூர்த்தி மூன்றாய்த் தானாயன் ஆயினான் (6.6: 6) என்றும் போற்றியுரைத்தலைக் கண்டு மகிழலாம். இதனை நம்மாழ்வாரும்,

இவையும் அவையும் உவையும்

இவரும் அவரும் உவரும் எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனிமுதல் எம்மான்க

5. திருவாய். 1. 9: 1