உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 பரகாலன் பைந்தமிழ்

வேறு எண்ணும் போது : 'நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை ஒன்றதும் மனத்து வைத்து உள்ளி' (திருவாய்) என்ற நம்மாழ்வார் வாக்இன் படி ஒரு தத்துவமாக மனத்தில் கொள்ளும்போது முகிலுரு வம் ஒன்றே தோன்றும்; அங்ங்ணமின்றி பிரித்து நோக்கும் போது மயக்கத்திற்குக் காரணமான அசாதாரண வடிவங் களைச்சொல்லுவதாகத் தோன்றும். நான்முகனது பொன் உருவமாக இருக்கும்; பொன் எல்லா அணிகளும் பண்ணு வதற்கு உரித்தாயிருப்பதுபோல், அவன் உருவம் பஇ. னான்கு உலகங்களையும் படைப்பதற்கு உரிய உருவம் என்று தோன்றுவதைக் குறிப்பிடும். உருத்தினது உருவம் செந்தி வடிவமாக இருக்கும்; தீயினது இயல்பு அனைத் தையும் கொளுத்துகையாலே உருத்ரனது இயல்பு சகத்தையெல்லாம் அழிப்பதற்கு உரித்தாயிருப்பதாக இருப்பதைக் குறிப்பிடும். கண்டார்க்கு விடாயைத் தீர்ப்ப தாக இருப்பதும், துட்டப் பிராணிகள், நல்ல பிராணிகள், இரத்தினம் முதலியவற்றோடு வேறுபாடு இன்றி எல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே இட்டு வைத்துக் காப்பது கடலின் இயல்பாகக் காணப்படுவதால், எம்பெருமா னுடைய இயல்பை நோக்கும்போது அண்டினவர்கட்குத் தாபத்திரயகரமாயும், அடைந்தாரைத் தன் அபிமானத் தில் அடக்கிக் காப்பதாகத் தோற்றுவதையும் குறிப்பிடும்."

ஒத்து நின்ற மூவுருவும் கண்டபோது : அவரவர்களு டைய தொழிலுக்கு ஏற்ப அவரவருடைய உருவம் பொருத்தமாக இருப்பதைக் குறிப்பிடுகின்றது இத் தொடர். சிருஷ்டிக்குப் பொருத்தமாகவுள்ளது பொன் உருவம்; அழித்தலுக்குப் பொருத்தமாக அமைவது செந்தி உருவம்; காப்பதற்குத் தகுதியாக இருப்பது மாக் கடலுரு வம். இவ்வாறு பொருத்திக் காண்க. ஆக, இப்படிப்பட்ட மூவுருவையும் பிரமாணகதி கொண்டு ஆராய்ந்தால்,