பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 10 பரகாலன் பைந்தமிழ்

மேற்கொண்ட செயலுக்குத் தக்கவாறு ஒவ்வொன்றிலும் இரண்டிரன் குணங்கள் விளக்கம் பெற்றிருக்கும்.

கிளை வியூகங்கள்: மேற்குறிப்பிட்ட நான்கு வியூகங் களும் ஒவ்வொன்றும் மும்மூன்றாகப் பன்னிரண்டு கிளை வியூகங்களாகப் பிரியும். வியூகவாசுதேவமனிடத்துக் கேச வன், நாராயணன், மாதவன் என்ற கிளைகளும்; சங்கர் ஷணனிடம் கோவிந்தன், விஷ்ணு மதுசூதனன் என்பவை களும்; பிரத்தியும்னனிடத்து திரிவிக்கிரமன், வாமனன் சீரீதரன் என்பவைகளும்; அநிருத்தனிடத்து. இருடிகேசன், பதுமநாபன். தாமோதரன் என்பவைகளும் தோன்றி அவ்வப் பெயர்களைப் பெறுவர்." இவை யாவும் பன்னிரு திங்களின் தலைவர்களாக இருக்கும். இவற்றின் அறிகுறி யாகத்தான் வைணவர்கள் தம் திருமேனியில் துவாதசமா கத் திருமண் காப்பிட்டுக் கொள்வர். இப்பன்னிரு திரு. மண் காப்பும் அவர்கள் திருமேனியில் மேற்சொன்ன பன்னிருவரும் அதிட்டித்து இருக்கும் இடங்களைக் குறிக் கும்.

விபவம் : விபவ அவதாரங்கள் எண்ணிறந்தவை. இவை ஆதிஅம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவையாதலின், பிறப்பு இறப்பு அற்றவனான இறை வனது தன்மைகளைக் கொண்டவை. இந்த அவதாரங் கள் யாவும் ஆழ்வார்களின் பாசுரங்களில் குறிப்பிடப் பெறுகின்றன. ஒரு திருப்பதிகத்தால் திருமங்கையாழ்வார் அவதாரங்களில் ஈடுபட்டுப் பேசுவதைக் காணமுடி கின்றது. இதில் ஒன்று,

துணைநிலை மற்றெமக்கு ஒர் உள தென்றிராது

தொழுமின்கள், தொண்டர்! தொலைய உணமுலை முன்கொடுத்த உரவோளது ஆவி

உகஉண்டு, வெண்ணெய் மருவி

15. திருவாய் 2.7 (பன்னிரு திருநாமப் பாட்டு.