பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 5.I.3

திருநறையூர்ப் பதிகம் ஒன்றில்,

சிறியாய்,ஒர் பிள்ளையுமாய்

உலகுண்டோ ராலிலைமேல்

உறைவாய் என்நெஞ்சினுள்ளே

உறைவாய், உறைந்ததுதான்;

அறியா திருந்ததயேன்.

அடியேன் (7.2:4)

என்றும், 'என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போக லொட்டேன்' (7.2:5) என்றும், இப்போதென் நெஞ் சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்’ (9.2:8) என்றும், 'யானாய் என்றனக்காய் அடியேன் மனம் புகுந்த, தேனே!” (7.2:9) என்றும் இந்த நிலை எம்பெரு மானை அநுசந்தித்து மகிழ்வதைக் காணலாம்.

அர்ச்சாவதாரம் : அர்ச்சாவதாரம் என்பது, 'தமரு கந்தது எவ்வுருவம் அவ்வுருவம் (முத. திருவந் 44) என்ற பொய்கையாழ்வார் கூற்றுப்படி அன்பர்கள் எதைத் த ம க் கு த் திருமேனியாகக் கொள்ளுகின்றனரோ அதனையே இறைவன் இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னாரிடத்தில் தோன்றி சந்நிதி பண்ண வேண்டும் என்கின்ற நியமமில்லாதபடி, தான் விரும்பிய எந்த இடத்திலும் எந்தக் காலத்திலும் எவரிடத்திலும் தோன்றிச் சந்நிதிபண்ணி நீராட்டம், தளிகை, இருப்பு முதலிய எல்லாச் செயல்களையும் உடையவனாகக் கொண்டு திவ்விய தேசங்களிலும் அன்பர்களின் திருமாளி கைகளிலும் எழுந்தருளியிருக்கும் நிலை இது. உலகியலில் மண்டியிருப்போருக்குத் தன்பக்கம் ருசி உண்டாக்குதலும் ருசி பிறந்த பிறகு தன்னைத் துதிப்பவர்களுடைய கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம்படிப்போக்கியத்திற்கு இடமாயிருந்தலும், தன்னை உபாயமாகப் பற்றும்

ப. கா.-33