பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 பரகாலன் பைந்தமிழ்

யுடன் எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்ற வனாய், பெரிய பிராட்டியரோடு கட்டைவிரல் அளவாக ஒவ்வொரு இதய கமலத்துக்குள்ளே எழுந்தருளியிருக்கும் இருப்பே இந்த நிலையாகும்.

திருவேங்கடம்பற்றிய திருப்பதிகம் ஒன்றில், மின்ஆர் முகில்சேர் திருவேங் கடம்மேய என்ஆனை என் அப்பன் என்நெஞ்சில் உளானே

(1.10:6) தேனே திருவேங்கட மாமலை மேய கோனே! என்மனம் குடிகொண்டிருந்தாயே

(1.10:7) வந்தாய்; என்மனம் புகுந்தாய் மன்னிநின்றாய்

(1.10:8) என்று ஆழ்வார் பேசுவது இந்த நிலையையை யாகும்.

திருவிண்ணகர் பதிகம் ஒன்றில்,

வானே மாநிலமே!

வந்துவந்தென் மனத்திருந்த தேனே! (6.2:3) என்றும்,

சுடர்போல்என் மனத்திருந்த வேதா! (6.2:9) என்றும், மற்றொரு பதிகத்தில்,

உன்னைஎன் மனத்தகத்தே திறம்பாமல் கொண்டேன் (63:2) என்றும்,

நின்னைநெஞ்சில் உய்யும் வகையுணர்ந்தேன் (6.3:6) என்றும் எம்பெருமான் இருப்பதாகப் பேசுவது இந்த நிலை எம்பெருமானையேயாகும்.