பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பரகாலன் பைந்தமிழ்

நின்றவூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருக்கடல் மல்லை, திரு இட எந்தை, திருக்கச்சியிலுள்ள பதினான்கு இவ்விய தேசங்கள், திருப்புட்குழி ஆகிய தலங்களையெல் லாம் சேவித்து மகங்களாசாசனம் செய்து தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணத்தை நிறைவு செய்கின்றார்.

அடுத்து, நடுநாட்டுத் திருத்தலங்களாகிய திருக்கோவ லூர், திருவயிந்திரபுரம் ஆகிய திருப்பதிகளைச் சேவித்து மங்களாசாசனம் செய்கின்றார்.

சோழநாட்டுத் திருப்பதிகளையும் சேவிக்கத் திருவுள் ளம் கொண்ட ஆழிவார் தில்லைச் திருச்சித்திர கூடம், காழிச் சீராமவிண்ணகரம், திருநாங்கூர்த் திருப்பதிகள் பதினொன்று, இந்தளூர், தலைச்சங்க நாண்மதியம், வெள்ளியங்குடி, புள்ளம் பூதங்குடி, திருக் கூடலூர், திரு. வெள்ளறை, திருவரங்கம் கரம்பனூர் (உத்தமர் கோயில்), திருப்பேர் நகர் (அப்பக் குடத்தான் சந்நிதி), கோழி (உறையூர்), நந்திபுரவிண்ணகரம், திருவிண்ணகர் (ஒப் பிலியப்பன் சந்நிதி), திருக்குடந்தை, தஞ்சை மாமணிக் கோயில், கண்டியூர், திருநறையூர் (நாச்சியார் கோயில்), திருச்சேறை, திருவழுந்துார், சிறுபுலியூர் சலசயனம், திருக்கண்ண மங்கை, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங் குடி, திருநாகை ஆகிய திருப்பதிகளைக் சேவித்துச் சோழ நாட்டுத் திருத்தலப் பயணத்தை நிறைவு செய்கின்றார்.

அடுத்து, பாண்டிநாட்டிற்கு வருகின்றார். திரு மெய்யம் தொடங்கி, திருப்புல்லாணி, திருமாலிருஞ் சோலை (அழகர் கோயில்), திருக்கோட்டியூர், மதுரைக் கூடல் (தென் மதுரை), திருமோகூர், திருத்தண்கால் (சிவ காசிக் கருகிலுள்ளது), திருக்குறுங்குடி ஆகிய திவ்விய தேசங்களையெல்லாம் சேவித்து அவற்றை மங்களாசா சனம் செய்கின்றார்.