பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பரகாலன் பைந்தமிழ்

நம்பியின் திருவருளால்தான் காரியாருக்கும் உடைய நங்கையாருக்கும் திருக்குமாரராய் அவதரித்தார் நம்மாழ் வார். அவருக்குப் பிறப்பை நல்கி நமக்குத் தேனும் பாலும் கன்னலும் அமுதும் கலந்த திருவாய்மொழியைக் கிடைக்கச் செய்தார். இந்த நம்பி எழுந்தருளியிருக்கும். திருக்குறுங்குடியில்தான் திருமங்கையாழ்வார் தம் துணைவி குமுதவல்லியாரோடு தம் இறுதிக் காலத்தைக் கழிக்கின்றார். பரமவிரக்தராய் சிலகாலம் நம்பியின் வடிவழகைக் கண்டு அநுபவித்துக் கொண்டிருந்து அங்கேயே திரு நாட்டுக்கு எழுந்தருளினார்.

கலந்ததிருக் கார்த்திகையில்

கார்த்திகை வந்தோன் வாழியே! காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே! நலந்திகழா யிரத்தெண்பத்து

நாலுரைத்தான் வாழியே! நாலைந்தும் ஆறைந்தும்

நமக்குரைத்தான் வாழியே! இலங்கெழுகூற் றிருக்கையிரு மடல் தந்தான் வாழியே! இம்மூன்றில் இருநூற்றிருபத்

தேழிந்தான் வாழியே! வலந்திகழும் குமுதவல்லி

மணவாளன் வாழியே! வாட்கலியன் பரகாலன்

மங்கையர்கோன் வாழியே 18

13. வாழித் திருநாமம்-9